நரை முடி, வெள்ளை முடி இவை இரண்டுமே நமக்கு முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கும். நரை முடியை கரு கருன்னு மாற்ற பலரும் டை உள்ளிட்ட ரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும் நரை முடியை கரு கருன்னு மாற்றவும், வெள்ளை முடி உருவாகாமல் தடுக்கவும் இயற்கை பொருட்களே போதுமானது. நரை முடியை கரு கருன்னு மாற்றிட அழகு கலை நிபுணர் வசுந்தரா பகிரும் முக்கிய அழகுக்குறிப்பை இந்த பதிவில் பார்ப்போம். தொலைக்காட்சிகளில் டாப் நடிகைகளுக்கு வசுந்தரா மேக்கப் போட்டு பார்த்திருப்போம். அவர் கூறும் தகவல் பலருக்கு
நரை முடிக்கு தீர்வு
மருதாணி ( ஹென்னா), செம்பருத்தி படவுர், நெல்லிக்காய் பவுடர், கரிசலாங்கண்ணி, வில்வ இலை பவுடர், எலுமிச்சை தோல் பவுடர், எலுமிச்சை சாறு, தயிர் ஆகிய பொருட்கள் போதுமானது. இந்த இயற்கை பொருட்களை கொண்டு நரை முடியை கரு கருன்னு மாற்ற முடியும் என அழகு கலை நிபுணர் வசுந்தரா கூறுகிறார்.
மருதாணியுடன் சேர்க்கப்படும் நெலிக்காய் பவுடர் தலைமுடிக்கு நிறம் கொடுக்கும். கரிசலாங்கண்ணி பவுடர் நரை முடி வராமல் தடுக்க கூடியது. முடி வெளுக்காமலும் கரிசலாங்கண்ணி தடுக்கும். வில்வ இலை பவுடர் பொடுகு தொல்லைக்கு தீர்வளிக்கும்.
நரை முடியை மாற்றும் இயற்கை பொருட்கள்
100 கிராம் மருதாணி பவுடருடன், செம்பருத்தி பூ பவுடர் ஒரு ஸ்பூன், காய வைத்து அரைத்த நெல்லிக்காய் பவுடர் ஒரு ஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு ஸ்பூன், எலுமிச்சை தோல் பவுடர் ஒரு ஸ்பூன், முருங்கை எண்ணெய் ஒரு ஸ்பூன், யூகலிப்டஸ் எண்ணெய் நான்கு சொட்டு, அரை எலுமிச்சை பழ சாறு, தயிர் மூன்று ஸ்பூன் போட்டு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு மாற்றவும். டை வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த இயற்கை பொருட்கள் நிச்சயம் உதவும். இதை தலையில் தேய்த்தால் கீழே கொட்டாத பதத்தில் இருக்க வேண்டும். 10 மணி நேரத்திற்கு இயற்கை பொருட்கள் கலவையை அப்படியே விட்டுவிடுங்கள்.
தலைமுடியில் பயன்படுத்துவது எப்படி ?
சாதாரணமாக தலையில் எண்ணெய் தேய்த்த அரை மணி நேரத்திற்கு பிறகு கைகளில் கிளவுஸ் போட்டு தலைமுடியில் இயற்கை பொருட்களை தடவுங்கள். கொத்து கொத்தாக முடியை பிடித்து தடவாமல் பேன் எடுக்கும் போது முடியை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து பார்ப்போது போல தடவுங்கள். வெள்ளை முடி வரக்கூடாது என நினைப்பர்வகள் ஒரு மணி நேரம் தலையில் அப்படியே விட்டு அதன் பிறகு குளிக்கலாம். நரைமுடி வந்த நபர்கள் 3-4 மணி நேரம் இந்த கலவையை தலையில் ஊறவிடவும்.
தலைக்கு குறைவான ஷாம்பூ போட்டு குளிக்கவும். இதை பயன்படுத்திய சில நாட்களிலயே நல்ல பலன் தெரியும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com