சருமத்தை எப்போதும் பளபளப்புடனும், பார்ப்பதற்கு வசீகரமாக வைத்திருக்க வேண்டும் என்று பல மெனக்கெடுவோம். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துவார்கள். இந்தந நடைமுறையை அனைவராலும் செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறி தான். பட்ஜெட்டில் வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு நிச்சயம் இது சவாலான விஷயம். இந்த நிலையைத் தவிர்ப்பதோடு, முகத்தை எப்போதும் பளபளப்புடன் வைத்திருக்க அங்கெங்கே அலைய வேண்டாம். இதோ வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள். நிச்சயம் முகத்தை அழகாக்க முடியும். இதோ என்னென்ன என இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: சருமத்தை மென்மையாக பராமரிக்க உதவும் பூக்கள் இதோ..!
முகத்தை பளபளப்பாக உதவும் சமையல் பொருட்கள்:
தேன் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக்:
முகத்தில் உள்ள பருக்களை நீக்குதற்கு தேன் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக் பயன்படுத்தலாம். இந்த பேஸ் செய்வதற்கு முதலில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்துக் கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் வழக்கம் போல பயன்படுத்தவும் பேஸ் பேக் போன்று உபயோகிக்கலாம். முகத்தில் தேன் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக்கை அப்ளை செய்து சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவும். இந்த பேஸ் பேக் முகப்பருவை திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.
இலவங்கப்பட்டை மற்றும் தேன் பேஸ் பேக்:
சமையல் அறையில் வாசனை பொருட்களுக்குப் பயன்படுத்தவும் இலவங்கப்பட்டை ஒரு இயற்கையான கிருமிநாசினியாக செயல்படுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. குறிப்பாக ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் கருந்திட்டுக்களை அகற்ற உதவுகிறது. இந்த பேஸ் பேக் செய்வதற்கு முதலில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் போன்றவற்றை பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர் இதை முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும். கருந்திட்டுக்கள் இன்றி முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்.
மேலும் படிக்க:வலுவான தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பயோட்டின் உணவுகள் இதோ..!
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி , சிட்ரிக் அமிலம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ஒரு பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருந்திட்டுகளைக் குறைக்க உதவும். ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் அதாவது அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், தோலில் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே எலுமிச்சையைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக ஏதேனும் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும். முன்னதாக உங்களது கைகளில் ஏதேனும் ஒரு இடத்தில் அப்ளை செய்து பார்ப்பது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation