நீளமான அடர்த்தியான முடியை விரும்பாத பெண்கள் உண்டா. பெண்கள் அனைவரும் முடி மீது அதிக கவனம், அக்கறை எடுத்து கொள்வார்கள். அழகை தாண்டி முடி மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம். அதற்காக வீட்டு வைத்தியங்கள் தொடங்கி முறையான மருத்துவ சிகிச்சை வரை செல்லும் பெண்களும் இங்கு உண்டு. அந்த வகையில் இந்த பதிவில் நீளமான, அடர்த்தியான முடியை பெற, க்ரீன் டீயை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை உங்களுக்கு சொல்ல போகிறோம். நோட் செய்து கொள்ளுங்கள்.
க்ரீன் டீ உடல் எடையை குறைப்பதில் இருந்து பளபளக்கும் சருமம் வரை பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. அதே போல் முடி பராமரிப்பிலும் க்ரீன் டீயை பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கேடசின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதே போல் முடியை வேரிலிருந்து திடப்படுத்தி முழுமையாக வளர உதவுகின்றன.
முட்டையின் மஞ்சள் கருவில் தேன், க்ரீன் டீ சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்..இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் ஷாம்பு கொண்டு ஹேர் வாஷ் செய்யவும்.
தேங்காய் எண்ணெய்யுடன் க்ரீன் டீ சேர்த்து மிக்ஸ் செய்து, உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் கழித்து முடியை அலசவும்.
ஒரு கப் க்ரீன் டீயை காய்ச்சி ஆறவிடவும். அதில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்கவும். இதை தலையில் தடவி ஊற விட்டு, பின்பு ஹேர் வாஷ் செய்யவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com