
பெண்களுக்கு பெரும்பாலும் அக்குள் பகுதியில் இருந்து வெளிவரும் வியர்வையால் உடல் முழுவது துர்நாற்றம் வீசுவம். இதிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை எளிமையாக ட்ரை செய்யலாம் அதுக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இந்த வீட்டு வைத்தியங்கள் முழுக்க முழுக்க இயற்கையானவை. இதை முறையாக பின்பற்றி இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.
கிரீன் டீ வியர்வையை குறைக்கவும் உதவும். அக்குள்களில் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க க்ரீன் டீயைப் பயன்படுத்தலாம். சில கிரீன் டீ பேக்குகளை எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கலாம். பின்பு அந்த கலவையை ஃபிர்ட்ஜில் வைத்து ஐஸ்கட்டிகளாக மாற்றி காலை மற்றும் இரவு நெரத்தில் அக்குள் பகுதியில் வைத்து உத்தடம் கொடுக்கலாம். இதை தொடர்ந்து பயன்படுத்துவது அக்குள் துர்நாற்றம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.
எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது பாக்டீரியாவை அழிக்கிறது. அக்குள்களில் துர்நாற்றம் வீசுவதற்கு மருந்தாக, எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து, தண்ணீரில் கலக்கலாம்.இந்த எலுமிச்சை சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து உங்கள் அக்குள்களில் ஸ்ப்ரே செய்யலாம்.

பேக்கிங் சோடா அக்குள் வாசனையை குறைக்க உதவுகிறது.சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட்டை உருவாக்கலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் அக்குளில் தடவி உலர விடவும். அது காய்ந்த பிறகு, வாஷ் செய்யவும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இது போல் செய்யவும்.
ஆப்பிள் சைடர் வினிகர் பாக்டீரியாவை திறம்பட அழிக்க உதவுகிறது. எனவே, அக்குள்களில் துர்நாற்றம் வீசுவதற்கான வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக இது உள்ளது. நீங்கள் ஆப்பிள் சைடர் வினிகரின் சில துளிகளை எடுத்து சிறிது தண்ணீரில் கரைக்கவும். அதை ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து, அதை உங்கள் அக்குள்களில் தெளித்து கட்டன் துணியால் துடைக்கவும்,.
பாக்டீரியாக்களை திறம்பட கொல்ல மஞ்சள் உதவும். நீங்கள் மஞ்சள் தூளை குளிப்பதற்கு முன்பு அக்குளில் தடவி விட்டு குளித்தால் துர்நாற்றம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வக இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com