herzindagi
aleo vera gel

Aloe Vera Gel Face Pack: சருமம் பளிச்சென்று இருக்க கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

கெமிக்கல் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சரும பராமரிப்பிற்கு கற்றாழை ஜெல்லைச் இப்படி சேர்த்துக்கொள்ளுங்கள்
Editorial
Updated:- 2023-07-04, 09:53 IST

சருமத்தைப் பராமரிக்க நாம் அனைவரும் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்களின் தரம் குறித்து சரியானதா என்பது அறிந்திருக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் வீட்டிலேயே இயற்கையான பொருட்களின் உதவியுடன் சருமத்தை அழகுபடுத்த சிறந்த வழிகளை பார்க்கலாம்.

அலோ வேரா ஜெல் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது சருமத்தை ஹைட்ரேட் செய்து இளமையாக மாற்றுவது மட்டுமல்லாமல் சருமத்தை மேலும் பிரகாசமாக்குகிறது. பல அழகு சாதனப் பொருட்களில் கூட நிறுவனங்கள் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அலோயின் மற்றும் அலோசின் போன்ற சில சருமத்தை பிரகாசமாக்கும் கலவைகள் கற்றாழை ஜெல்லில் காணப்படுகின்றன. 

அலோ வேரா ஜெல் மற்றும் வெள்ளரி 

aleo vera gel

வறண்ட சருமம்  அல்லது உணர்திறன் கொண்டதாக இருந்தால் கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவது நல்லது. இந்த ஃபேஸ் பேக் கோடைகாலத்திற்கு சிறந்தது மற்றும் சருமத்தை இயற்கையாக பளிச்சிட வைக்க உதவும்.

தேவையான பொருட்கள் 

  • 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
  • வெள்ளரி
  • தேன் ஒரு ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

  • வெள்ளரிக்காயை  பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். 
  • அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
  • பின் சருமத்தை சுத்தம் செய்து, கலவையை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும்.
  • சுமார் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

அலோ வேரா ஜெல் மற்றும் மஞ்சள் 

aleo vera gel

இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஒளிரச் செய்யவும், பளபளக்கவும் உதவுகிறது. இது போன்ற ஃபேஸ் பேக் அனைத்து சருமத்திற்கு வகைகளுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள் 

  • 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • அரை தேக்கரண்டி தேன்

பயன்படுத்தும் முறை 

  • ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கவும்.
  • அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • சருமத்தை சுத்தம் செய்து பேஸ்ட்டை தடவி சுமார் 20 நிமிடங்கள் விடவும்.
  • இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவவும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை

aleo vera gel

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துவதால், இந்த மாஸ்க் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் சருமத்தை ஒளிரச் செய்கிறது.

தேவையான பொருட்கள் 

  • 2 டீஸ்பூன் அலோ வேரா ஜெல்
  • 1/4 எலுமிச்சை சாறு

பயன்படுத்தும் முறை 

  • கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் சருமத்தை சுத்தம் செய்து கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
  • சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

இந்தக் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்தையும் கருத்துப் பெட்டியில் தெரிவிக்க வேண்டும். 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரையை படிக்க Herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit – freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com