திருமண அழைப்பிதழை தாம்பூல தட்டில் வைத்துக் கொடுப்பது எதனால்?
Alagar Raj AP
21-01-2025, 16:10 IST
www.herzindagi.com
அழைப்பிதழ்
திருமணம் மற்றும் வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகை புரியுமாறு முறையாக அழைப்பது வழக்கம்.
தாம்பூல தட்டு
அழைப்பிதழ் வழங்கும் போது வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ உள்ளிட்டவற்றை சேர்த்து தாம்பூல தட்டில் வைத்து வழங்கும் பழக்கம் சிலருக்கு உள்ளது. அழைப்பிதழை தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பது எதனால் என்பதை பார்க்கலாம்.
வேற்றுமையின்மை
அழைப்பிதழை கொடுப்பவரும், அதை வாங்குவோரும் பொருளாதார அளவில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பின்தங்கிய நிலையில் இருந்தாலும் மனதில் வேற்றுமையில்லை என்பதை காட்டுவதற்காக தாம்பூல தட்டில் வைத்து தரப்படுகிறது.
அனைவரும் சமம்
ஒரு பொருளை வெறும் கையால் கொடுக்கும் போது கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவர் கை கீழேயும் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகள் தோன்றக் கூடாது என்பதற்காக தாம்பூல தட்டில் வைத்துக் கொடுக்கப்படுகிறது.
கடன்
அழைப்பிதழ் மட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு பொருளை கடனாக கொடுக்கும் போது கூட தட்டில் வைத்து தான் நம் முன்னோர்கள் கொடுப்பார்கள்.
மங்கள மகிமை
அழைப்பிதழை வழங்கும் போது வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ உள்ளிட்டவற்றை சேர்த்து வழங்குவது மங்களகரமதாக கருதப்படுகிறது.
மூதாதையர்களின் பழக்கம்
இந்த காரணங்களுக்காக தான் நம் மூதாதையர்கள் அழைப்பிதழை தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.