உடலின் 7 சக்கரங்களும் அவற்றின் குணாதிசயங்களும்


Alagar Raj AP
26-11-2024, 14:26 IST
www.herzindagi.com

7 சக்கரம்

    சக்ரா என்பது சமஸ்கிருதத்தில் வட்டம் அல்லது சக்கரம் என்று பொருள். 7 சக்கரம் என்பது உடலில் முதுகுத்தண்டில் அடித்தளத்திலிருந்து உச்சந்தலை வரை உள்ள வட்டமான 7 ஆற்றல் மையங்களை குறிக்கிறது.

7 சக்கரத்தின் குணாதிசயங்கள்

    இந்த சக்கரங்கள் பண்டைய தியான நடைமுறையில் பயன்படுத்தப்படும் மைய புள்ளிகள் ஆகும். நாம் இந்த பதிவில் இந்த 7 சக்கரங்கள் உடலில் எங்குள்ளது மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் குறித்து பார்ப்போம்.

மூலாதாரம்

    முதுகெலும்பின் அடிப்பகுதியில் ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே உள்ள மூலாதார சக்கரம் உயிர், லட்சியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது சுய நம்பிக்கையின்மை, ஆற்றல் குறைபாடு போன்றவற்றை உணர்வீர்கள்.

ஸ்வாதிஷ்டானம்

    பிறப்புறுப்புக்கு சற்று மேலே தொப்புளுக்கு சற்று கீழே அமைந்துள்ள ஸ்வாதிஷ்டான சக்கரம் படைப்பாற்றல், இன்பம் மற்றும் பாலியல் உணர்ச்சியை குறிக்கிறது. இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது தவறான பாலியல் எண்ணங்கள் மற்றும் படைப்பாற்றல் குறைபாடு ஏற்படும்.

மணிபூரகம்

    அடிவயிற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர சக்கரம் சுயமரியாதையை குறிக்கிறது. இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது கோபம், ஈகோ போன்ற சுயமரியாதை பாதிக்கும் நிலை ஏற்படும்.

அனாஹதம்

    மார்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள அனாஹத சக்கரம் இதய சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது காதல் மற்றும் இரக்கத்தை குறிக்கிறது. இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது இரக்கமின்மை, பொறாமை, பயம் அதிகரிக்கும்.

விஷுத்தி

    தொண்டை குழியில் அமைந்துள்ள விஷுத்தி சக்கரம் ஆரோக்கியம் மற்றும் உத்வேகத்தை குறிக்கிறது. இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படும்.

ஆக்னா

    புருவங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஆக்னா சக்கரம் மூன்றாவது கண் சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. செறிவு மற்றும் விழிப்புணர்வை குறிக்கும் இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது கண் பிரச்சனைகள், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சகஸ்ராரம்

    உச்சந்தலையில் அமைந்துள்ள சகஸ்ரார சக்கரம் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இந்த சக்கரம் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சிந்தனைகளை குறிக்கிறது. இந்த சக்கரம் நிலையாக இல்லாத போது மன அழுத்தம், விரக்தி போன்ற உளவியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.