புளி இல்லாமல் ரசம் வைக்க முடியுமா? சுவையான கொய்யா ரசம் ரெசிபி இதோ
G Kanimozhi
27-07-2025, 19:15 IST
www.herzindagi.com
புளி இல்லாமல் தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கொய்யாப்பழம் வைத்து ரசம் வைக்கலாம் வாங்க. இதற்கு கொய்யாப்பழத்தை நன்கு மசித்து, புளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
கொய்யா ரசம் எப்படி செய்வது?
கொய்யாப்பழத்தை மசித்தல்
நன்கு பழுத்த கொய்யாப்பழத்தை எடுத்து, தோலுரித்து, விதைகளை நீக்கிவிட்டு, மசித்துக்கொள்ளுங்கள்.
ரசப் பொடி தயாரித்தல்
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து ரசப்பொடி தயார் செய்யவும்.
தாளிக்க
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மசித்த கொய்யாப்பழம், ரசப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
தண்ணீர் சேர்க்கவும்
இப்போது அதே கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10 அல்லது 15 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
கொத்தமல்லி
ரசம் நன்றாக கொதி வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். சுவையான கொய்யா ரசம் தயார்.