தோசை கல்லில் ஒட்டாமல் மொறுமொறுனு சுட வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்


G Kanimozhi
31-07-2025, 19:58 IST
www.herzindagi.com

மொறுமொறு தோசை

    டிபன் உணவு வகைகளில் அனைவருக்கும் பிடித்த ஈஸியான ரெசிபி தான் தோசை. ஆனால் இந்த தோசை சில நேரங்களில் கல்லில் ஒட்டிக்கொள்ளும் அல்லது பிய்ஞ்சி போகும். இனி கிழியாமல் மொறுமொறு தோசை சுட்டெடுக்க சில டிப்ஸ் இங்கு பார்க்கலாம்.

கல்லை சுத்தம் செய்யுங்கள்

    தோசை சுடுவதற்கு முன் உங்கள் தோசை கல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதால் தோசை கல்லில் படிந்திருக்கும் தூசு மற்றும் அடி பிடித்த துகள்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு வெங்காயம்

    தோசை கல்லை சுத்தம் செய்த பின் அடுத்ததாக வெங்காயம் அல்லது உருளைகிழங்கு எடுத்து பாதியாக நறுக்கி எண்ணெயில் முக்கி தோசைக்கல்லில் தேய்க்க வேண்டும்.

தோசை மாவு

    பலரும் செய்யும் தவறு ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மாவை நேரடியாக அப்படியே அடுத்து தோசை சுடுவார்கள். இந்த மாவை 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பு எடுத்து வெளியே வைக்க வேண்டும்.

தண்ணீர்

    தோசை கிழியாமல் வராததற்கு தண்ணீர் பதம் சரியாக இல்லாததும் ஒரு முக்கிய காரணம். நீங்கள் தோசை சுடுவதாக இருந்தால் அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது.

எண்ணெய்

    தோசை கல்லில் மாவு ஊற்றுவதற்கு முன் எண்ணெய் அதிகமாக ஊற்றி தேய்த்துவிட்டால் மாவு தோசைக்கல்லில் ஒட்டிவிடும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.