எளிமையான சில பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சாக்லேட் செய்யலாம். இந்த ஹோம் மேடு சாக்லேட்களுடன் உங்கள் காதலர் தின கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்குங்கள்.
Image Credit : freepik
தேவையான பொருட்கள்
பால் பவுடர் - 1 ¼ கப்
சர்க்கரை - ⅔ கப்
கொக்கோ பவுடர் - 5 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - ½ கப்
வெண்ணெய் - ¼ கப்
Image Credit : freepik
ஸ்டெப் 1
முதலில் பால் பவுடர் மற்றும் கொக்கோ பவுடரை கட்டிகள் இல்லாமல் ஜலித்துக் கொள்ளவும்.
Image Credit : freepik
ஸ்டெப் 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். ஒரு கம்பி பதம் வரும் வரை இதை கொதிக்க விட வேண்டும்
Image Credit : freepik
ஸ்டெப் 3
பாகு சரியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பிறகு இதனுடன் வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் 4
இப்போது இதில் ஜலித்து வைத்துள்ள பால் பவுடர் மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் 5
இந்த கலவையை பார்ச்மென்ட் பேப்பர் அல்லது சாக்லேட் மோல்டில் சமமாக பரப்பி ஆற விடவும்.
Image Credit : freepik
ஸ்டெப் 6
30 நிமிடங்கள் கழித்து, சாக்லேட் செட் ஆன பிறகு வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.