கலப்படம் உள்ள டீத்தூளை கண்டறிய 7 வழிகள்


Alagar Raj AP
07-02-2025, 18:37 IST
www.herzindagi.com

டீத்தூள்

    நிஜ டீத்தூள் மற்றும் போலி டீத்தூள் இரண்டுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் சுவையில் இருக்கும். ஆனால் சில சோதனைகளை செய்வதன் மூலம் போலி டீத்தூளை அடையாளம் காணலாம்.

நீர் சோதனை

    ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் டீத்தூளை போடவும். கலப்படமில்லா டீத்தூள் தண்ணீரின் நிறத்தை உடனே மாற்றாது. ஆனால் போலி டீத்தூள் தண்ணீரின் நிறத்தை உடனே மாற்றும்.

டிஷ்யூ பேப்பர் டெஸ்ட்

    ஒரு டிஷ்யூ பேப்பரில் ஒரு ஸ்பூன் டீத்தூளை போட்டு, சில துளிகள் தண்ணீரை தெளிக்கவும். டீத்தூள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் டிஷ்யூ பேப்பரில் அதன் கரை படரும். நிஜ டீத்தூளில் கரை படராது.

காந்த சோதனை

    ஒரு பேப்பரில் ஒரு ஸ்பூன் டீத்தூளை பரப்பி அதன் மேல் காந்தத்தை வைத்து நகர்த்தவும். டீத்தூளில் ஏதேனும் உலோகத் துகள்கள் இருந்தால் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இதன் மூலம் அசுத்தமான டீத்தூளை அடையாளம் காண முடியும்.

நிறம்

    உண்மையான டீத்தூள் பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். அதே சமயம் போலி டீத்தூள் லேசான அல்லது அடர் நிறங்களைக் கொண்டிருக்கலாம்.

தேய்த்து பாருங்கள்

    டீத்தூளை உங்கள் விரல்களில் வைத்து தேய்த்து பாருங்கள். அதன் நிறம் விரல்களில் ஓட்டினால் அது போலியான டீத்தூளாக இருக்கும். நிஜ டீத்தூள் நிறத்தை அவ்வளவு சீக்கிரம் இழக்காது.

எலுமிச்சை சாறு சோதனை

    எலுமிச்சை சாற்றில் சிறிதளவு டீத்தூளை போட்டு பார்க்கவும். உண்மையான டீத்தூள் எலுமிச்சை சாற்றை பச்சை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றும். அதுவே எலுமிச்சை சாற்றின் நிறம் ஆரஞ்சு அல்லது வேறு நிறமாக மாறினால் கலப்பட டீத்தூளாக இருக்கலாம்.

நறுமணம்

    டீத்தூளை நன்றாக முகர்ந்து பாருங்கள். பூச்சிக்கொல்லி அல்லது ஏதேனும் வேதியியல் வாசனை வந்தால் அந்த டீத்தூள் அசுத்தமான இருக்கலாம்.