Propose Dayல் நீங்கள் காதலிக்கும் நபருக்கு அனுப்ப வேண்டிய காதல் கவிதைகள்


Alagar Raj AP
07-02-2024, 17:00 IST
www.herzindagi.com

    பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும், பார்க்கும் இடமெல்லாம் உன் முகம்தான் தெரிகிறது. என்னவளே என் இனியவளே.

    உன் இதய சிறையில் உன் இதயமாக வாழ்ந்திட, உன் சுவாசத்தில் உன் சுவாசமாக வாழ்ந்திட, உன் உயிரை என் உயிராய் சுமந்திட ஆசையடா எனக்கு.

    பூவும் பூத்திருக்கு. உன் புன்னகையும் பூத்திருக்கு. பூக்காத என் மனதில் புதிதாய் உன் காதலும் பூத்திருக்கு.

    என் காதலை. ஏற்பாயா என்று தெரியவில்லை.. ஆனாலும் நினைவுகளை சேர்க்கிறேன்.. காதலுடன் உன்னோடு.

    ஒரு முறையாவது உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் சொல்லாமல் விட்ட என் காதலை.

    காதல் என்னும் கடலில் விழுந்து தவிக்கிறேன். உன் கண்கள் வீசும் வலையில் மாட்டி துடிக்கிறேன். கரம் பிடிப்பாயா… நான் கரை சேர.