காச நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறை மற்றும் காரணங்கள்
Sanmathi Arun
06-04-2023, 18:12 IST
www.herzindagi.com
காசநோய் ஏற்படுவதன் காரணம்?
மைக்ரோ பாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் எனப்படும் ஒரு பாக்டீரியா தொற்று தான் காச நோயை ஏற்படுத்துகிறது. காற்றின் மூலம் இந்த பாக்டீரியாக்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் தொற்றி விடும் தன்மை கொண்டது
Image Credit : freepik
காசநோய் யாருக்கு வரும்?
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நாள்பட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள், கல்லீரல், சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், புற்று நோய்க்கான மருத்துவம் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் எளிதில் தொற்றி விடும்.
Image Credit : freepik
காச நோயின் அறிகுறிகள்
2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் இருக்கும் பட்சத்தில் காசநோயாக இருக்கலாம்.
திடீரென ஒரு மாதத்தில் 5,6 கிலோ உடல் எடை குறைதல்
இருமும் போது சளியில் ரத்தம் கலந்து வருவது
இரவில் வியர்ப்பது
பசியின்மை
மாலை நேரத்தில் காய்ச்சல் ஏற்படுவது
Image Credit : freepik
காசநோய் எந்த பகுதியை பாதிக்கும்
பெரும்பாலும் காசநோய் நுரையீரலை மட்டுமே பாதிக்கும். அதை தவிர, சிலருக்கு வயிற்றில், சிலருக்கு எலும்புகள், மூளை, கருப்பை என்று எங்கும் வரலாம்.
Image Credit : freepik
இலவச மருத்துவம்
காச நோய் என்பதை கண்டறிவது தொடங்கி, அதற்குண்டான தொடர் சிகிச்சைகள் அனைத்தும் இந்திய அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நோய்க்கான சிகிச்சை சற்று நீண்ட செயல்முறையாக இருக்கும். எனவே மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி, மருந்துகளை தவறாமல் எடுத்து கொண்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.
Image Credit : freepik
முக்கிய குறிப்புகள்
6 மாதம் முதல் 1 வருடம் வரை மருத்துவர் பரிந்துத்ரைத்த மாத்திரையை தவறமால் எடுத்து கொள்ள வேண்டும்.
காசநோய்க்கு முறையான சிகிச்சை பெற்றால் குணபடுத்தகூடியதே, எனவே மன தைரியம் மிக அவசியம்.
சரியான தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை , தன்னம்பிக்கை இருந்தால் எளிதில் மீண்டிடலாம்.
Image Credit : freepik
உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்
காசநோயாளிகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை உணவு உட்கொள்ள வேண்டும். அதிக உப்பு மற்றும் கார உணவுகளை சேர்க்க கூடாது. நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடலாம். காய்கறிகள், கீரைகள், வைட்டமின் E, வைட்டமின் C அதிகம் உள்ளபழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்தவர் பரிந்துரைத்த மாத்திரையுடன் சில வீட்டு வைத்தியமும் பின்பற்றுவது சிறந்தது
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
உலக சுகாதார தினமான இன்று இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.