நீரிழிவு நோயை தீர்க்கும் இன்சுலின் செடியின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை
Sanmathi Arun
12-04-2023, 18:33 IST
www.herzindagi.com
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் வெகுவாகக் குறைக்கிறது, இதன் காரணமாக ஒரு நபர் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
Image Credit : freepik
நிபுணர் கருத்து
இன்சுலின் இலை மருத்துவ தாவரங்களில் ஒன்றாகும், இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது எப்படி வேலை செய்கிறது? இதுபற்றி உணவியல் நிபுணர் சிம்ரன் சைனியின் கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.
Image Credit : freepik
இன்சுலின் இலை
இந்த இலைகளில் இன்சுலின் இல்லை, அதே போல் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யாது, ஆனால் இந்த இலையில் இருக்கும் இயற்கை இரசாயனங்கள் சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றுகிறது, இது வளர்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்கிறது.
Image Credit : freepik
இன்சுலின் இலைகளின் நன்மைகள்
இன்சுலின் இலைகளில் புரதங்கள், டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்பு, பி-கரோட்டின், கார்சோலிக் அமிலம் போன்ற மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.
Image Credit : freepik
நீரிழிவு நோய்க்கு இன்சுலின் இலை
இதன் இலைகளில் கார்சோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த இரசாயனம் கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பை அதிகரித்து மந்திரம் போட்டது போல் செயல்படுகிறது.
Image Credit : freepik
சாப்பிடும் முறை
சர்க்கரையின் அளவில் நல்ல மாற்றங்களை பெற, ஒரு மாதத்திற்கு தினமும் இந்த செடியின் இலைகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மென்று சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.
Image Credit : freepik
மாற்று முறை
இன்சுலின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும் . பொடியை தினமும் உட்கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு உட்கொள்ளலாம்.
Image Credit : freepik
எச்சரிக்கை
இன்சுலின் இலைகளை பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் உட்கொள்ள வேண்டாம். இது உடல்நலம் தொடர்பான பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.