பெண்களுக்கு பல நன்மைகளை அள்ளி தரும் சுவரொட்டி!!!


sreeja kumar
05-01-2023, 16:35 IST
www.herzindagi.com

சுவரொட்டி

    ஆட்டு மண்ணீரல், ’சுவரொட்டி’ என அழைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் அமினோ அமிலங்கள், B12, இரும்பு சத்துக்கள் ஆகியவை பல நோய்களை சரிசெய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு சுவரொட்டி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

Image Credit : freepik

கர்ப்பிணி பெண்கள்

    கர்ப்பிணி பெண்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுவரொட்டியை செய்து சாப்பிடுவது நன்மை பயக்கும். இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்து ஆகியவற்றை சீராக வழங்குகிறது.

Image Credit : freepik

இரத்த சோகை

    மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இந்த நேரத்தில் சுவரொட்டி சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் வைட்டமின்-C ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

Image Credit : freepik

நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்கள் சுவரொட்டியை உட்கொள்வது நல்ல தீர்வாகும். வைட்டமின் A, வைட்டமின் B12, புரதம், இரும்புச்சத்து, குரோமியம், ஃபோலிக் அமிலம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் சுவரொட்டியில் உள்ளன.

Image Credit : freepik

சிறுநீரக நோய்

    சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு சுவரொட்டி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது சிறுநீரக தொற்று பிரச்சனையை சரிசெய்கிறது. மாதத்திற்கு 2 முறை சுவரொட்டி சாப்பிடுவது நல்ல பலனை தரும்.

Image Credit : freepik

மாதவிடாய் பிரச்சனை

    ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நாட்களில் முறையற்ற இரத்த போக்கு ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய பெண்கள் வாரம் ஒருமுறை சுவரொட்டியை உட்கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும்.

Image Credit : freepik

முடக்கு வாதம்

    மூட்டுகளில் அதிகப்படியான வலி, முடக்கு வாதம் பிரச்சனை உள்ள பெண்கள் வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சுவரொட்டியை செய்து சாப்பிடலாம். சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் முடக்கு வாதத்தை சீராக்குகிறது.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    எனவே, உடல் ஆரோக்கியத்துக்கு சுவரொட்டி சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik