நேத்து வெச்ச மீன் குழம்பு சாப்பிடுவது நல்லதா? எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம்?
G Kanimozhi
21-07-2025, 13:36 IST
www.herzindagi.com
அசைவ உணவுகளில் கடல் உணவு வகைகள் சுவை அதிகம் கொண்டது. குறிப்பாக பலருக்கும் மீன் சுவையான ஒரு விருப்பமாக உள்ளது. மீன் குழம்பு மீன் வறுவல் மீன் புட்டு என்று பலவகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
மீன் குழம்பு
ஒரு சிலருக்கு மீன் வறுவல் செய்வதை விட இந்த மீன் குழம்பு சமைத்து சாப்பிட பிடிக்கும். அதிலும் இன்று சமைத்து அந்த மீன் குழம்பை அடுத்த நாள் சாப்பிடுவது சுவையாக இருக்கும் என்று கூறுவார்கள்.
நேத்து வெச்ச மீன் குழம்பு
பல வீடுகளிலும் மீன் குழம்பு வைக்கும் போதே அதை 2 அல்லது மூன்று நாட்கள் யூஸ் செய்யும் விதத்தில் அதிகம் சமைப்பார்கள்.
பிரிட்ஜில் வைக்கலாமா?
மீன் குழம்பை தாராளமாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். ஆனாலும் அதை சரியாக சூடாக்கி குளிர்விப்பதும், காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைப்பதும் அதன் சுவை மற்றும் புத்துணர்ச்சியை தக்க வைக்க உதவும்.
இட்லி மீன் குழம்பு
ஏரி, குளங்களில் இருக்கும், விரால் மீன் குழம்பு மறுநாள் காலையில் இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் மற்றும் கேழ்வரகு களியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம்
நாம் வீட்டில் சமைக்கும் மீன் குழம்பை பிரிட்ஜில் வைத்து 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். ஒவ்வொரு முறையும் மீன் குழம்பை சூடு செய்து சாப்பிடும் போது கவனம் தேவை. ஏன் என்றால் அதிகம் சூடு செய்தால் உணவு நச்சுத்தன்மை ஆகும் வாய்ப்புகள் உள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்