தூத்துக்குடி கடல் சார்ந்த பகுதி என்பதால் தூத்துக்குடி உணவு வகைகளில் மீன் முக்கிய இடம் வகிக்கிறது. அசைவம் மட்டுமின்றி இனிப்பு வகைகளும் இங்கு பிரபலம்.
தூத்துக்குடி மக்ரூன்
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான இனிப்பு வகை என்றால் அது தூத்துக்குடி மக்ரூன். பிற பகுதியில் பாதாம் அல்லது தேங்காய் துருவல் கொண்டு மக்ரூன் தயாரிக்கப்படுகிறது ஆனால் தூத்துக்குடி மக்ரூன்கள் முந்திரியினை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் தூத்துக்குடி மக்ரூன் விலை அதிகம்.
கோவில்பட்டி கடலை மிட்டாய்
தூத்துக்குடியில் மற்றொரு பிரபலமான இனிப்பு கோவில்பட்டி கடலை மிட்டாய். அப்பகுதிகளில் அதிகம் விளையும் நிலக்கடலையில் இனிப்பு தன்மை அதிகமாக இருப்பது மற்ற கடலை மிட்டாய்களிடம் இருந்து கோவில்பட்டி கடலைமிட்டாய் வேறுபடுகிறது.
கருவாட்டு குழம்பு
தூத்துக்குடி மீனவர்களால் மீன் பிடிக்கப்பட்டு அதை உலர வைத்து சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு மற்றும் தேங்காய், முருங்கைக்காய் மற்றும் பிரிஞ்சி, துண்டுகள், எள், கடுகு, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கருவாட்டு குழம்பு சமைக்கபடுபிகிறது.
மீன் வறுவல்
வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா கலவையை அதனுடன் சேர்த்து தேங்காய், வெங்காயம் மற்றும் சீரக விழுதுகள் உள்ளிட்டவை கொண்டு மீன் வறுவல் சமைக்கப்படுகிறது.
வெந்தய களி
தூத்துக்குடி மக்களின் காலை மற்றும் இரவு உணவு சாப்பிடப்படும் வெந்தய களி. இது வெந்தயம், அரிசி, வெல்லம், உப்பு, எள் எண்ணெய் மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கபடுகிறது.
உளுந்தங் களி
உளுந்தங் களி தூத்துக்குடி பகுதியின் மற்றொரு பிரபல இனிப்பு வகை. இது உளுத்தம் பருப்பு, அரிசி, தூத்துக்குடியில் அதிகம் கிடைக்கும் பனை சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறதது.