உடல் எடை அதிகரிக்கும் பொழுது முகம், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளில் கொழுப்பு அதிகமாக சேர தொடங்குகின்றன. முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அல்லது சதையை குறைக்க பின்வரும் எளிய பயிற்சிகளை முயற்சி செய்யலாம்…
Image Credit : freepik
பௌட் போஸ்
பல பெண்கள் செல்பி எடுக்கும் பொழுது இந்த போஸை கொடுக்கிறார்கள். முகம், கழுத்து பகுதியில் உள்ள சதையை குறைக்க இந்த செல்ஃபி அல்லது பௌட் போஸ் சிறந்தது.
Image Credit : freepik
செய்வது எப்படி
உங்கள் உதடுகளை வெளியே தள்ளி, 10 வினாடிகள் வரை வைத்திருக்கலாம். இதை செய்து உங்கள் தாடை தசைகளையும் வலுப்படுத்தலாம்.
Image Credit : freepik
நாக்கு பயிற்சி
இந்த பயிற்சியை தினமும் 10-20 முறை செய்து வர டபுள் சின் மற்றும் முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க முடியும்.
Image Credit : freepik
செய்வது எப்படி
இதை செய்வதற்கு முதலில் உங்களுடைய நாக்கை நீட்டிக் கொள்ளுங்கள். பிறகு முகத்தை சற்று மேலே உயர்த்தி, நாக்கை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு கொண்டுவரவும்.
Image Credit : freepik
ஃபிஷ் போஸ்
முகம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள சதையை குறைக்க இந்த போஸ் உதவும்.
Image Credit : freepik
செய்வது எப்படி?
உங்களுடைய கன்னங்களை உள் இழுத்து மீனின் முகம் போன்ற தோரணையை உருவாக்கவும். இந்த பயிற்சியை தினமும் 4-5 முறை செய்யவும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.