குழந்தைகளைக் கிறிஸ்துமஸ் தினத்தன்று கியூட்டாக அலங்கரிக்க ஆடை யோசனைகள்!


Sreeja Kumar
20-12-2022, 19:41 IST
www.herzindagi.com

குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் ஆடைகள்

    குழந்தைகளுக்கான ஆடைகளை நேர்த்தியாகத் தேர்வு செய்து, அணிவித்து அழகு பார்ப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோசம் அளவில் அடங்காதது.

Image Credit : freepik

0 முதல் 1 வயது குழந்தைகளுக்கு

    கிறிஸ்துமஸ் வண்ணங்களில்(சிவப்பு, வெள்ளை & பச்சை) பேபி ராம்பர்ஸ் தேர்வு செய்யுங்கள். இது உங்கள் குழந்தையைத் தலை முதல் கால்வரை வசதியாகவும் அரவணைப்பாகவும் உணர வைக்கும்.

Image Credit : freepik

பெண் குழந்தைகளுக்கு

    கலர் கலர் தீம்களில், சிறு சிறு மணிகள் வைத்துத் தைத்த இந்திய மேற்கத்திய ஸ்டைலில் வந்துள்ள லேட்டஸ்ட் கவுன் மாடல்கள் சர்ச்சுக்கு அணியப் பொருத்தமாக இருக்கும். இந்த ஆடையில் உங்கள் பெண் குழந்தைகள் குட்டி தேவதைபோல் இருப்பார்கள்.

Image Credit : freepik

ஆண் குழந்தைகளுக்கு

    ஹூடட் ஒவுட்ஃபிட்: இந்த ஹூடட் செட்டில் முன் பக்க பாக்கெட்டுகளுடன் கூடிய வண்ணமயமான சட்டை மற்றும் அச்சிடப்பட்ட ஜாகர் பேன்ட்ஸ் ஆகியவை அடங்கும். பருத்தியால் செய்யப்பட்ட ஆடை மிகவும் மென்மையாகவும் வசதியாகவும் இருக்கும். சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Image Credit : freepik

மிக்ஸ் அண்ட் மேட்ச்

    உங்கள் குழந்தைகளிடம் ஏற்கனவே இருக்கும் வெள்ளை நிற பேன்ட் மற்றும் சிகப்பு நிற டாப், மூக்குக் கண்ணாடி, வெண் தாடி மற்றும் சிகப்பு வெள்ளை நிறம் கலந்த கிறிஸ்துமஸ் தொப்பி அணிவித்துச் சாண்டா கிளாஸ் வேடம் உருவாக்கி அவர்களை மகிழ்விக்கவும்.

Image Credit : freepik

ஸ்வெட்டர் டிரெஸ்

    இந்தப் பருவ காலத்திற்கு ஏற்ற ஸ்வெட்டர் காம்போ ட்ரெஸ் ஆண் /பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் பிரபலமாக இருக்கிறது. முன்னணி ஜவுளிக் கடை மற்றும் ஷோரூம்களில், இந்த ஆடைகள் கிடைக்கின்றன.

Image Credit : freepik

புகைப்படம் எடுங்கள்

    கி‌றி‌ஸ்ம‌ஸ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ன் துவ‌க்கமாக வீடுகளில் சிறிய ஸ்டார் தொங்க விடுங்கள். குழந்தைகளை அழகிய ஆடைகளில் அலங்கரித்துப் புகைப்படங்கள் எடுத்து நினைவுகளைச் சேகரியுங்கள். இது உங்கள் குழந்தைகளை மேலும் மகிழ்ச்சியடையச் செய்யும்

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik