ரணகள்ளி மூலிகையின் அதீத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?


Alagar Raj AP
11-02-2025, 13:30 IST
www.herzindagi.com

ரணகள்ளி மூலிகை

    ரணகள்ளி என்பது முக்கிய மூலிகை தாவரங்களில் ஒன்று. ரணம் என்றால் புண் என்று அர்த்தம். இதற்கு ரணத்தை ஆற்றும் தன்மை இருப்பதால் ரணகள்ளி என்று அழைக்கப்படுகிறது.

ரணகள்ளி நன்மைகள்

    ரணகள்ளி அல்லது மலைக்கள்ளி என்றும் இந்த தாவரம் அழைக்கப்படுகிறது. பலரின் வீட்டில் அழகுக்காக இந்த தாவரம் வளர்க்கப்பட்டாலும், இதன் இலைகளில் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளன.

காயத்தை குணப்படுத்தும்

    ரணகள்ளி இலைகளை நசுக்கி அதன் சாற்றை சிறிய வெட்டுகள் அல்லது சிராய்ப்புகளுக்கு மேற்பூச்சாக பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்

    ரணகள்ளி இலைகளை அரைத்து சாறாக தினமும் குடித்து வர சர்க்கரை அளவு குறையும் என்று கூறப்படுகிறது.

காய்ச்சல் குறையும்

    ரணகள்ளியில் உள்ள ஆண்டிபிரைடிக் பண்பு காய்ச்சலை குறைக்கும். அதற்கு ரணகள்ளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் சாறு உதவும்.

உடல் எடை குறையும்

    இந்த தாவரத்தின் சாறு இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும்.

செரிமான ஆரோக்கியம்

    ரணகள்ளி இலைகளை உலர வைத்து அதில் டீ போட்டு குடித்தால் வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற செரிமான பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

தலைவலி நிவாரணம்

    இதன் இலைகளை பேஸ்ட் தண்ணீரில் கலந்து போல் அரைத்து தலையில் பத்து போட்டால் தலைவலி பறந்துவிடும்.

குறிப்பு

    இந்த பதிவில் உள்ள தகவல்கள் பொதுவானவை என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த குறிப்புகளை முயற்சிக்க வேண்டாம்.