அதிகம் பழுத்த வாழைப்பழத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்


Alagar Raj AP
27-01-2025, 13:28 IST
www.herzindagi.com

அதிகம் பழுத்த வாழைப்பழம்

    வாழைப்பழம் அதிகம் பழுக்கும் போது உற்பத்தியாகும் எத்திலீன் வாயு அதன் தோல்களை கரும்புள்ளிகளாக மாற்றும். இதை சிலர் வாழைப்பழம் அழுகிவிட்டதாக நினைத்து தூக்கிப்போட்டு விடுவார்கள். ஆனால் அதிகம் பழுத்த வாழைப்பழத்தில் எக்கச்சக்க நன்மைகள் உள்ளன.

நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம்

    அதிகம் பழுத்த வாழைப்பழம் ஆன்டாசிட் ஆக செயல்பட்டு வயிற்றில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்கி அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலைப் போக்க உதவும்.

இதய ஆரோக்கியம்

    சாதாரண வாழைப்பழத்தை போல் அதிகம் பழுத்த வாழைப்பழமும் இதயத்திற்கு ஆரோக்கியத்ரிக்கு நன்மை பயக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

மன ஆரோக்கியம்

    அதிகமாக பழுத்த வாழைப்பழங்களில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது.

தசை வலிக்கு நிவாரணம்

    பழுத்த வாழைப் பழங்களில் அதிகளவில் உள்ள பொட்டாசியம் தசை வலி மற்றும் தசை பிடிப்புகளைப் போக்க உதவும்.

புற்றுநோய்க்கு எதிரானது

    வாழைப்பழ தோலில் உள்ள கரும்புள்ளிகளில் புற்றுநோய் செல்களைத் தகர்க்கும் டியூமர் நெக்ரோசிஸ் என்ற ஒருவகையான புரதம் உள்ளது. இது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

குறிப்பு

    வாழைப்பழத்தின் தோல் முற்றிலும் கருப்பு நிறமாக மாறினால், அவற்றில் ஏதேனும் திரவங்கள் வெளியேறினால் அல்லது துர்நாற்றம் வீசினால் அவற்றை சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல.