பெண்களின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் 5 நட்ஸ்!
Shobana Vigneshwar
05-06-2023, 09:38 IST
www.herzindagi.com
ஹீமோகுளோபின் அதிகரிக்க நட்ஸ்
நட்ஸில் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமான கொழுப்புகளும் நிறைந்துள்ளன. இவை உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. பெண்களின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் 5 நட்ஸ் வகைகளை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
Image Credit : freepik
கருப்பு உலர் திராட்சை
உலர் திராட்சையில் விதைகளுடன் இருக்கும் கருப்பு உலர் திராட்சையை தேர்வு செய்து சாப்பிடுங்கள். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்பு சத்து கருப்பை மற்றும் சினைப்பையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Image Credit : freepik
பேரிச்சம் பழம்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் 2-3 பேரிச்சம் பழங்களை சாப்பிடலாம். இது உடனடி ஆற்றல் தருவதுடன் தூக்கமின்மையை போக்கவும் உதவுகிறது. பேரிச்சம் பழங்களை சாப்பிடுவது பெண்களின் எலும்பு மற்றும் சருமத்திற்கு நன்மை தரும்.
Image Credit : freepik
பாதாம்
கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க பாதாமை ஊறவைத்து சாப்பிடலாம். பாதாம் சாப்பிடுவதால் நினைவாற்றல் மேம்படும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
Image Credit : freepik
பிஸ்தா
கண் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்பட பிஸ்தா பருப்புகளை சாப்பிடலாம். இதன் மூலம் மலக்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம். தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
Image Credit : freepik
அக்ரூட்
ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அக்ரூட் பருப்புகள் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரும். அழற்சியை குறைக்கவும், குடல் ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும் அக்ரூட் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.