பெண்களின் வயது கூடும்போது, கருமுட்டையின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதால் கர்ப்ப கால பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனையிலிருந்து விடுபடவும், கருவுறுதலை மேம்படுத்தவும் பின்வரும் உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Image Credit : freepik
அவகேடோ
அவகேடோவில் உள்ள கொழுப்பு அமிலம், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருவுறுதல் திறனையும் மேம்படுத்துகிறது. இது பெண்களுக்கு ஏற்ற சிறந்த பழமாகும்.
Image Credit : freepik
பருப்பு மற்றும் பயறு வகைகள்
இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு மற்றும் பயறு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பெண்களின் கருவுறுதல் திறனை மேம்படுத்துகின்றன.
Image Credit : freepik
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்
கருமுட்டையின் தரத்தை மேம்படுத்த பிரக்கோலி, கீரை, முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Credit : freepik
உலர் பழங்கள்
உலர் பழங்கள், குறிப்பாக பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சை போன்றவற்றை தினமும் சாப்பிடலாம். ஏனெனில் இவை கரு முட்டையின் உற்பத்திக்கு உதவுகின்றன. மேலும் இவை புரதம் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகவும் இருக்கின்றன.
Image Credit : freepik
எள்
அவகேடோவை போலவே, எள்ளிலும் ஒற்றை நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது பெண்களின் கருவுறுதல் திறனை மேம்படுத்துகிறது. எள்ளை சட்னி, உருண்டை அல்லது லட்டுவாகச் செய்து சாப்பிடலாம்.
Image Credit : freepik
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கவும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கருப்பையிலிருந்து வெளிவரும் முட்டைகளை ப்ரீ ரேடிகல்களிடமிருந்து பாதுகாக்கிறது.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க சத்தான உணவைச் சாப்பிடுங்கள். இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.