நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் மிக்க உணவுகள்
Alagar Raj AP
22-04-2025, 13:42 IST
www.herzindagi.com
துத்தநாகம் குறைவின் பாதிப்புகள்
உடலில் துத்தநாகம் குறைபாட்டால் முடி உதிர்தல், வறண்ட சருமம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, எடை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை தடுக்க உடலில் துத்தநாகத்தை அதிகரிக்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் பொருட்கள்
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான பிற ஊட்டச்சத்துக்களுடன் துத்தநாகத்தையும் வழங்குகிறது.
இறைச்சி
நாட்டுக்கோழி மற்றும் வான்கோழி ஆகியவற்றில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளடக்கம் இருக்கிறது.
பருப்பு வகைகள்
கொண்டைக்கடலை, பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது.
தானியங்கள்
ஓட்ஸ், குயினோவா உள்ளிட்ட தானியங்கள் உடலுக்கு தேவையான துத்தநாகத்தை வழங்குகிறன.
கடல் உணவுகள்
நண்டுகள் மற்றும் இறால்கள் துத்தநாகத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
நட்ஸ்
முந்திரி, பூசணி விதைகள், எள் ஆகியவை துத்தநாகத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது.