இரவில் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? இந்த விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க!
G Kanimozhi
14-07-2025, 15:55 IST
www.herzindagi.com
இரவில் வாழைப்பழம்
இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டால் உணவு விரைவில் ஜீரணம் ஆகும் என்று கூறுவார்கள். ஒரு சிலர் உடல் எடையை அதிகரிக்க உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவார்கள். இந்த பழக்கம் நல்லது என்றாலும் ஒரு சில பக்க விளைவுகளும் உள்ளது.
உடலுக்கு என்ன ஆகும்
இரவு நேரங்களில் குறிப்பாக மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சளி பிடிக்கும்
குளிர்காலத்தில் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் சளி காய்ச்சல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு நுரையீரல் பிரச்சனை சுவாச பிரச்சனை கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செரிமான பிரச்சனை
இறைச்சி முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளோடு வாழைப்பழத்தை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
எந்த நேரத்தில் சாப்பிடலாம்
நீங்கள் மதிய நேரத்தில் வாழைப்பழத்தை உணவுக்குப் பிறகு சாப்பிடலாம். இதனால் சளி காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாது.
மாலை நேரம்
மாலை நேரத்தில் கூட வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனென்றால் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போல உணர வைக்கும்.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்