30 வயதுக்கு பின்பு பெண்கள் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை கருவளையம். ஆனால் இப்போதெல்லாம் 20 வயதிலே பெண்களுக்கு கருவளையம் வந்து விடுகிறது. அதிகப்படியான மொபைல் பயன்பாடு, உணவு பழக்கம், தூங்கும் நேரம், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. இதை சரிசெய்ய பல்வேறு வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் முக்கியமானது எண்ணெய் பயன்பாடு.
கண்களுக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் கருவளையத்தை சரிசெய்யலாம் தெரியுமா? அதிலும் பாதாம் எண்ணெய் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை விரட்ட எற்றது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பாதாம் எண்ணெயில் இருக்கும் ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம் மற்றும் ஸ்டெரிக் அமிலம் ஆகியவவை கண்களுக்கு ஈரப்பதத்தை தருகின்றன. வறண்ட பகுதியை சரிசெய்கின்றன பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ, ஏ மற்றும் கே உள்ளன. இது கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கின்றன.
குறிப்பு : கண் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், கண்ணாடி அணிபவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின்பு இதை ட்ரை செய்யவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com