பெண்களுக்கு முடியின் வளர்ச்சியில் ஒரு தனி அக்கரை உண்டு, குறிப்பாக முடி நீளமான வளர பெண்கள் தனி முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் இன்றைய கால பெண்கள் வேலைக்கு செல்வதால் கூந்தல் பராமரிப்பில் அதிக நேரம் செலவிட முடியாததாலும், பெரும்பாலான பெண்கள் குட்டையான கூந்தலை வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் சில பெண்கள் இடுப்பு வரை முடியை வளர்க்கிறார்கள். அப்படி வளர்க்கும் பெண்களின் கூந்தல் சேதமடைகிறது அல்லது தடிமன் இல்லாமல், வறண்டு, உயிரற்றதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீண்ட மற்றும் அழகான முடி வேண்டும் என்ற நினைக்கிறார்கள்.
சந்தையில் பல போலி கூந்தால் வளர்ப்பு பொருட்கள் விற்க்கப்படுகிறது, அவை பயன்படுத்தி உஙகள் தலைமுடிக்கு தேவையான நீளத்தை கொடுக்கலாம். ஆனால் அது தற்காலிகமானது. ஆப்படி வாங்கி பயன்படுத்தும் பெருட்கள் முடி நீளமாக இருந்தால், அதில் தடிமனாக இருக்காது. மெல்லிய நீளத்தால் எந்தப் பயனும் இல்லை, பார்க்க அழகாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியின் நீளத்துடன், அதை அடர்த்தியாக வைத்திருப்பது முக்கியம். இதற்கு மலிவான மற்றும் வீட்டு வைத்தியம் இருக்கிறது, இன்று இந்த கட்டுரையில் அழகு நிபுணர் பூனம் சுக் எங்களிடம் கூறிய சில எளிதான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாங்கள் உங்களுக்கு கூறுவோம்.
Image Credit: Freepik
பூசணி விதை எண்ணெய் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது, அவற்றை அடர்த்தியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது. இதில் உள்ள ஜிங்க் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
Image Credit: Freepik
முடி அடர்த்தியாகவும் நீளாமகவும் இருக்க வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாகும். இது முடியின் வேர்களை பலப்படுத்துவதோடு, முடி உதிர்வு பிரச்சனையையும் குறைக்கிறது. இதை உங்கள் தலைமுடியில் பல வழிகளில் பயன்படுத்தலாம்.
கற்றாழை முடிக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், ஈரப்பதத்தையும் தருகிறது. இதில் வைட்டமின் சி உள்ளதால் முடிக்கு பளபளப்பைக் கொண்டு வந்து அடர்த்தியாக இருக்கும்.
Image Credit: Freepik
நெல்லிக்காய் மற்றும் ஷிகாகாய் முடியை வலுவாகவும் நீளமாகவும் மாற்ற உதவும் பழைய காலத்து முறையாகும். இவை இரண்டும் இயற்கையான கண்டிஷனர்களாகவும் செயல்படுகின்றன. இது உங்கள் தலைமுடிக்கு தடிமன் சேர்ப்பதைத் தவிர, அவற்றை மென்மையாக்குகிறது.
முட்டை மற்றும் தயிர் முடிக்கு இயற்கையான புரதம் மற்றும் ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரங்கள்.
Image Credit: Freepik
வெங்காய சாறு முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது மற்றும் வேர்களை பலப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி முடியை அடர்த்தியாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. நீங்கள் அடர்த்தியான கூந்தலை விரும்பினால் வாரத்திற்கு ஒரு முறையாவது வெங்காய சாற்றை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த வீட்டு வைத்தியம் மற்றும் சரியான கவனிப்பு மூலம், உங்கள் மெல்லிய முடியை மீண்டும் அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் மாற்றலாம். இந்த வைத்தியங்களை தவறாமல் பின்பற்றி, இழந்த உங்கள் தலைமுடியை மீண்டும் பெறுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com