புரட்டாசி மாதம் 2024 : என்னென்ன விசேஷங்கள் எந்த தேதியில் வருகிறது?


Alagar Raj AP
16-09-2024, 17:00 IST
www.herzindagi.com

புரட்டாசி மாத பிறப்பு

    2024 புரட்டாசி மாதம் செப்டம்பர் 17, செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் பௌர்ணமி திதியில் பிறக்கிறது என்பதால், மாதத்தின் முதல் நாளை புரட்டாசி மாத பௌர்ணமி ஏற்படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

மகாளய பட்சம்

    பித்ருக்களின் அருளை பெறுவதற்குரிய முக்கிய காலமாக மகாளய பட்சம் உள்ளது. இது செப்டம்பர் 18, புரட்டாசி 2 தொடங்கி 15 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஜென்ம பாவங்கள் நீங்கும்.

மஹாபரணி

    மஹாபரணி என்பது புரட்டாசி மாதத்தில் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரமாக இருப்பதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மன மகிழ்ச்சி அடைவார்கள் என்பது ஐதீகம். செப்டம்பர் 21, புரட்டாசி 5ம் தேதி மஹாபரணி வருகிறது.

மகாளய அமாவாசை

    புரட்டாசி 2இல் தொடங்கும் மகாளய பட்சம் மகாளய அமாவாசை நாளான அக்டோபர் 2, புரட்டாசி 16 நிறைவடைகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் ஆத்மா சாந்தி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

நவராத்திரி ஆரம்பம்

    அக்டோபர் 3, புரட்டாசி 17ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விசேஷ நாட்களில் வீட்டில் கொலு வைத்து வழிபடலாம்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

    அக்டோபர் 11, புரட்டாசி 25 அன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லுக்கு ஏற்றது போல் இந்த நாளில் உங்கள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை வைத்து வழிபடலாம்.

விஜயதசமி

    நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 12, புரட்டாசி 26 வரும் இந்த நாளில் கல்விக்கு அதிபதியாக உள்ள சரஸ்வதி தேவியை வழிபட்டு உங்கள் கல்வியை தொடங்கலாம்.