First Period: முதல் மாதவிடாய்க்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Alagar Raj AP
07-03-2024, 17:33 IST
www.herzindagi.com
ஒவ்வொரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது என்பது இயற்கையான ஒன்று. ஆகையால் இளம் பெண்கள் தங்கள் முதல் மாதவிடாயை எதிர் கொள்ளும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளிப்படையாக பேசுவது
மாதவிடாய் குறித்து பெற்றோர், நண்பர்கள், மருத்துவர்களிடம் வெளிப்படையாக பேசும் போது அது குறித்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
மனநிலை மாற்றங்கள் பொதுவானவையே
மாதவிடாயின் போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது பொதுவான விஷயம். முதல் மாதவிடாயை எதிர்கொள்ளும் போது இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தூய்மையில் கவனம்
மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருப்பது அவசியம். சரியான நேரத்தில் பேட்களை மாற்றுவது மிகவும் முக்கியம்.ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை பேட்களை மாற்ற வேண்டும்.
மருந்துகளை தவிர்க்கவும்
மாதவிடாயின் ஆரம்ப காலங்களில் இளம் பெண்களுக்கு தீவிரமான மனநிலை மாற்றங்கள் மற்றும் உடல் வலி ஏற்படுவது சாதாரணமானது, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பயன்படுத்தும் முறை
முதல் மாதவிடாயை எதிர் கொள்வதற்கு முன் சானிட்டரி பேட், கப் மற்றும் டம்பான்கள் பயன்படுத்தும் முறையை அறிந்து கொள்வது அவசியம்.
மாதவிடாய் ஏற்படுவது நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகிறது. இது கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.