ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விசேச நாட்கள்!


Jansi Malashree V
24-07-2024, 18:20 IST
www.herzindagi.com

    ஆடி மாதம் வந்தாலே அம்மனுக்கு கூழ் காய்ச்சிப் படைத்தல், முன்னோர்களை வழிபடுதல் என பல்வேறு முக்கிய விசேச நாட்கள் இருக்கும்.

ஆடி வெள்ளி/ செவ்வாய்:

    ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் வழிபாட்டிற்கு ஏற்ற விசேச நாள்கள் ஆகும்.

ஆடி கிருத்திகை:

    முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நாட்களில் விசேசமானது ஆடி கிருத்திகை. இந்தாண்டு ஜூலை 29 ல் கொண்டாடப்படவுள்ளது.

ஆடிப்பெருக்கு:

    ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள். ஆம் ஆடி 18 ல் கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு நாளில் எந்த காரியங்கள் செய்தால் சிறப்பானதாக அமையும்.

ஆடி அமாவாசை:

    ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களின் வழிபாட்டிற்கு உகந்த நாள். ஆனாலும் ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும். இந்தாண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

வரலட்சுமி விரதம்:

    ஆடி மாதத்தில் 3 வது அல்லது 4 வது வார வெள்ளிக்கிழமைகளில் வரலெட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப்படும். இந்தாண்டு ஆகஸ்ட் 16 ல் வருகிறது.

நாக சதுர்த்தி:

    நாக தோஷத்தைப் போக்கும் நாக சதுர்த்தி ஆடி மாதம் அதாவது ஆகஸ்ட் 8ல் வருகிறது.