பி.எஃப் பணத்தை இனி மூன்றே நாட்களில் சுலபமாக பெறலாம்.. எப்படி தெரியுமா?
Alagar Raj AP
15-05-2024, 14:21 IST
www.herzindagi.com
உடல் நலக் குறைபாடு போன்ற மருத்துவ காரணத்திற்காக விரைவில் பணத்தை பெரும் ஆட்டோ-செட்டில்மெண்ட் என்ற முறையை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த 2020 ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது.
தற்போது இந்த ஆட்டோ-செட்டில்மெண்ட் வசதியை விதி 68K இன் கீழ் கல்வி மற்றும் திருமணத்திற்கும், விதி 68B இன் கீழ் வீட்டு வசதிக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
முதலில் கல்வி, திருமணம் மற்றும் வீட்டு வசதிக்காக பி.எஃப் பணத்தை க்ளெய்ம் செய்ய KYC நிலை, வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்ப்பது போன்ற காரணிகளால் சில நாட்கள் எடுக்கும்.
ஆட்டோ-செட்டில்மெண்ட் முறை மனித தலையீடு இல்லாமல் தகவல் தொழில்நுட்ப அமைப்பால் செயல்படுத்த படுவதால் 3-4 நாட்களில் பி.எஃப் பணத்தை க்ளெய்ம் செய்யலாம்.
இந்த நடவடிக்கை மூலம் திருமணம், உயர்கல்வி மற்றும் வீட்டு வசதிக்காக பயனாளர்கள் ரூ.50,000 - ரூ.1,00,000 வரை கிளெய்ம் செய்யலாம்.
திருமணம் அல்லது உயர்கல்வி
விதி 68K படி திருமணம் அல்லது உயர்கல்வி நோக்கத்திற்காக நிதியைப் பெற விரும்பும் பயனாளர்கள் EPFO உடன் 7 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 50% வட்டியுடன் மூன்று முறை இந்த நிதியை க்ளெய்ம் செய்யலாம்.
வீட்டுவசதி
விதி 68B படி புது வீடு வாங்க அல்லது வீட்டைப் பழுது பார்க்க நிதியை பெற விரும்பும் பயனாளர்கள் EPFO உடன் ஐந்து வருடங்களை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த நிதியை இரண்டு முறை க்ளெய்ம் செய்யலாம்.