குழந்தைக்கு சளி பிடித்தால் வாழைப்பழம் கொடுக்கலாமா?


Alagar Raj AP
13-06-2024, 17:00 IST
www.herzindagi.com

    சளி பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா, வாழைப்பழத்தால் சளி வருமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கும். அந்த சந்தேகத்திற்கான விடையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வைட்டமின் சி

    வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் போராடும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

    வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் ஊட்டச்சத்தை அதிகரித்து சளியில் இருந்து மீட்க உதவுகின்றன.

செரிமானம் எளிதாகும்

    வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. வாழைப்பழத்தை சளி பிடித்த குழந்தைகள் சாப்பிட்டால் வயிறு சுத்தமாகி மென்மையான தன்மையை அளிக்கும்.

ஆற்றல்

    வாழைப்பழத்தில் இயற்கையாகவே உள்ள சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் ஆகிய சர்க்கரைகள் ஆற்றலை வழங்குவதால் சளி, காய்ச்சல் காலத்தில் குழந்தைகள் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆற்றல் கிடைக்கும்.

தூங்க உதவும்

    மாலையில் ஒரு வாழைப்பழத்தில் சாப்பிட்டால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் மெக்னீசியத்துடன் இணைந்து நிம்மதியான தூக்கத்தை அளிக்கும். இது குழந்தையின் ஓய்வுக்கு உதவியாக இருக்கும்.

    இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை என்பதால் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் மருத்துவரின் அனுமதியுடன் அவர்களுக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.