பித்த தோஷத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் செரிமான மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இதை தடுக்க பித்த தோஷத்தை சம நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான சில குறிப்புகளை இன்றைய பதிவில் காணலாம்…
Image Credit : freepik
குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடலாம்
பித்தம் குறைய வெள்ளரிக்காய், தேங்காய் பால், பச்சை இலை காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவு சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய உணவுகள் நன்மை தரும்.
Image Credit : freepik
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள இளநீர், புதினா மற்றும் வெள்ளரி நீர், மூலிகை டீ போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் தேங்காய் எண்ணெயை கொண்டு உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம்.
Image Credit : freepik
சேர்க்க வேண்டிய மசாலா பொருட்கள்
தனியா, சோம்பு மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களை உணவில் சேர்த்து வர உணவு எளிதில் ஜீரணமாகும். இதனுடன் பித்தத்தையும் குறைக்கலாம்.
Image Credit : freepik
தவிர்க்க வேண்டிய உணவுகள்
பித்தத்தை குறைக்க அதிக காரம், எண்ணெய் மற்றும் புளிப்பு உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம் அல்லது போதுமானவரை தவிர்க்க முயற்சி செய்யலாம்.
Image Credit : freepik
ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்தலாம்
வேம்பு பொடி, நெல்லிக்காய் பொடி, திரிபலா பொடி போன்ற பல மூலிகை பொருட்கள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி பித்த தோஷத்தை சமநிலைப்படுத்துகின்றன. இது போன்ற மூலிகைகளை கொண்டு டீ போட்டு குடிக்கலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.