திடீர் மாரடைப்பை தடுக்கும் மருதம் பட்டையின் நன்மைகள்
Sanmathi Arun
10-03-2023, 22:29 IST
www.herzindagi.com
மருதம் பட்டை
சரியான உணவு பழக்கம் இல்லாமல் போனதால் இதய நோய்களான மாரடைப்பு ,நெஞ்சு வலி அனைத்து வயதினரையும் தாக்க ஆரம்பித்து விட்டது. இதயத்திற்கு பலம் சேர்க்கும் மருதம் பட்டை நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Image Credit : google
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மருதம் பட்டை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இதய செயல்பாட்டை மேம்படுத்தி தமனியில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை 25 சதவிகிதம் குறைக்கிறது.
Image Credit : freepik
கொலஸ்ட்ராலை குறைக்கிறது
மருதம் பட்டை அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குணப்படுத்துவதில் நன்மை பயக்கும். அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளை குறைக்கும்.
Image Credit : freepik
எடையை குறைக்க உதவுகிறது
உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, உடல் பருமனுக்கு முக்கிய காரணமான மலச்சிக்கலை குறைக்கிறது.
Image Credit : freepik
அஜீரணத்திற்கு உதவுகிறது
வயிற்றின் ph அளவை அதிகரிப்பதன் மூலம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை குணப்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Image Credit : freepik
சளி மற்றும் இருமலுக்கு உதவுகிறது
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது, இது ஜலதோஷம், நெரிசல், இருமல், தொண்டை புண் போன்றவற்றில் நிவாரணம் அளிக்கிறது.
Image Credit : freepik
மாதவிடாய் வலியை குறைக்கிறது
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்த போக்கை தடுக்கிறது மற்றும் மாதவிடாய் காலத்தில் வலியைக் குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
கூடுதல் நன்மைகள்
சிறுநீர் பிரச்சனைகளை நீக்குகிறது
பிறப்புறுப்பு தொற்று மற்றும் UTIயை தீர்கிறது
ஒற்றைத் தலைவலியைப் போக்குகிறது
தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது
ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி சிகிச்சையளிக்கிறது
Image Credit : google
எச்சரிக்கை
சித்த மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கட்டாயம் நீங்களாக உட்கொள்ள கூடாது. மருத்துவ ஆலோசனையுடன் குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்வதே சிறந்தது.
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்