வேகமாக கருத்தரிக்க முருங்கை கீரையை எப்படி சாப்பிடலாம்?


Sanmathi Arun
02-04-2023, 12:15 IST
www.herzindagi.com

கர்ப்பம் தரிக்க முருங்கை கீரை எவ்வாறு உதவுகிறது?

    உணவு பழக்கம் காரணமாகவும், மாறிப் போன வாழ்க்கை முறை காரணமாகவும் சில பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது கடினமாகிறது. எளிதாக கிடைக்கும் முருங்கை கீரை நம் ஆரோக்கியத்திற்கு கிடைத்த வரம். கருத்தரிக்க முருங்கை இலை மற்றும் முருங்கை மரத்தின் மற்ற நன்மைகளை பற்றி இங்கு காணலாம்.

Image Credit : pinterest

முருங்கை கீரை நன்மைகள்

    முருங்கை கீரையை பிரம்ம இலை என்பார்கள். இதில் உள்ள சத்துக்களின் அளவு, வேறு எந்த உணவு பொருளிலும் இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்து சத்துக்களும் உள்ளது.பெண்களின் கருமுட்டை வளரவும், ஆண்களின் அணுக்கள் அதிகரிக்கவும் முருங்கை கீரை பெரிதும் உதவும்.

Image Credit : pinterest

முருங்கை கீரையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன

    வைட்டமின் A, B, C, D, K மற்றும் B காம்ப்ளக்ஸ் ஆகிய வைட்டமின்கள் உள்ளன. கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் ஆகிய தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் அதிகமாக இருக்கிறது

Image Credit : pinterest

விந்தணுவிற்கு ஊட்டம் தரும் முருங்கைகீரை

    முருங்கை கீரை சாப்பிடும் போது, ஆண்களுக்கு வீரியமான விந்தணுக்கள் உருவாகும். ஆண்களின் பாலியல் சுரப்பியான புரோஸ்டேட் சுரப்பி ஆரோக்யமாக செயல்படும். ஆண்களுக்கு விந்தணுக்கள் மற்றும் சில திரவங்கள், இந்த புராஸ்டேட்டில் இருந்து தான் வெளி வருகிறது.

Image Credit : pinterest

பெண்களின் கருமுட்டை வளர்சிக்கு உதவும்

    கருமுட்டை வளர்ச்சி இல்லாத பெண்கள் முருங்கை கீரை வாரம் இரண்டு முறை முருங்கை பூவுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது கருத்தரிக்கவும் கருமுட்டை வளர்சிக்கும் உதவும்.

Image Credit : freepik

அணுக்களின் உருவத்தில் மாற்றம் ஏற்படுத்தும்

    சிலருக்கு விந்தணுக்களின் மார்பாலஜி என்று சொல்ல கூடிய அணுக்களின் உருவ அமைப்பில் மாற்றம் இருக்கும். அவர்களுக்கு முருங்கை பிசின் பொடியை தேன் அல்லது தண்ணீரில் கலந்து 48 நாள் முதல் 90 நாள் வரை தொடர்ந்து குடிக்கலாம்.

Image Credit : freepik

சாப்பிடும் முறை

  • முருங்கை கீரை மற்றும் பூவுடன் சூப்பாக சாப்பிடலாம்
  • பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிடலாம்
  • முருங்கை டீ
  • முருங்கை கீரை இட்லி பொடி
  • முருங்கை பூக்களை பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம்

Image Credit : freepik

கூடுதல் நன்மைகள்

    வாரத்தில் 2 - 3 முறை முருங்கை கீரை மற்ற நாட்களில் அரை கீரை மற்றும் மணத்தக்காளி கீரை சாப்பிடுவது ,தினசரி ஒரு நெல்லிக்காய் தவறாமல் சாப்பிடுவது விரைவாக கருத்தரிக்க உதவும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    தினசரி எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை அவசியம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik