Balanced Life: வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த வழிகள்


Alagar Raj AP
26-01-2024, 13:00 IST
www.herzindagi.com

போராடும் மக்கள்

    பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வேலைக்கும் குடும்பத்துக்கும் இடையில் சம நிலையை கண்டறிய போராடுகிறார்கள்.

பாதிப்புகள்

    சோர்வு, மோசமான உடல்நிலை, தூக்கமின்மை, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை இழத்தல், மன அழுத்தம், சகிப்பு தன்மை இழத்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

வேலை

    கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுக்குள் நீங்கள் முன்னுரிமை அளிக்கும் வேலைகளை மட்டும் செய்து முடிக்கவும். நீங்கள் உங்கள் நேரத்தை கடந்து அதிகமாக வேலை செய்ய முயற்சித்தால் காலப்போக்கில் உளவியல் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

வேலைக்கான பட்டியலை உருவாக்கவும்

    நீங்கள் வேலையை தொடங்கும் முன் அந்த நாளுக்கான பட்டியலை உருவாக்கி கொண்டு அதன்படி செயல்படுங்கள். அந்த நாளுக்கான வேலையை மட்டும் செய்து முடிக்கவும். மறு நாளுக்கான வேலையை மறு நாள் பார்த்துக் கொள்ளவும்.

மேலாளருக்கு புரிய வையுங்கள்

    உங்கள் வேலை சவாலாக இருப்பதை உணர்ந்தால் அது குறித்து உங்கள் மேலாளருக்கு புரிய வைத்து அதற்கான தீர்வை ஆலோசனை செய்யுங்கள்.

வீட்டில்

    உங்கள் அலுவலக பணிகளை அலுவலகத்திலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து அலுவலக வேலை செய்வதை தவிர்க்கவும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்

    வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது அலுவலக மன அழுத்தத்தில் இருந்து சற்று விடு பெற முடியும்.