கோரைப் பாயில் படுத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
Alagar Raj AP
08-07-2024, 13:32 IST
www.herzindagi.com
கோரைப் புற்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் கோரைப் பாய் என்று அழைக்கப்படுகிறது. இதில் படுத்து தூங்குவதால் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
மன அழுத்தம் குறையும்
கோரைப் பாயின் இயற்கையான அமைப்பு பதட்டத்தைக் குறைக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கத்தை பெற இயலும்.
சிறந்த தூக்கம்
உடல் சூடாக இருக்கும் போது தூங்க சிரமமாக இருக்கும். கோரைப் பாயில் படுப்பதால் உடல் சூட்டை பாய் உள்வாங்கி உங்கள் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை தரும்.
முதுகு வலியை போக்கும்
நாள்பட்ட முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் கோரைப் பாயில் படுத்து தூங்கினால் முதுகு வலி குறையும். பாயின் உறுதியான மற்றும் ஆதரவான மேற்பரப்பு முதுகெலும்பை நடுநிலை நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
பூச்சிகள் நெருங்காது
கோரைப் பாயின் கற்பூரம் போன்ற நறுமணம் காரணமாக பூச்சிகள் அருகே நெருங்காது. இதனால் குழந்தைகளை தாராளமாக கோரைப் பாயில் தூங்க வைக்கலாம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
கோரைப் பாயில் படுப்பதால் ஏற்படும் அழுத்தம் அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டுகிறது, இதனால் உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் முழுவதும் இரத்த சுழற்சியை ஊக்குவிக்கும்.
காய்ச்சலை குறைக்கும்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது கோரைப் பாயில் தூங்குவதால் காய்ச்சல் குறையும் என்று கூறப்படுகிறது.