Examination Tips : தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் செய்யும் 5 பொதுவான தவறுகள்


Alagar Raj AP
25-01-2024, 15:47 IST
www.herzindagi.com

மன அழுத்தம்

    தேர்வு இறுதி நாட்களில் தேர்வு குறித்து மன அழுத்தம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது அதை தடுக்க ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மனப்பாடம்

    பெரும்பாலான மாணவர்கள் பாடத்தை மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். அவ்வாறு படித்தால் தேர்வில் வினாக்கள் பதிலை மறப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் மனப்பாடம் செய்யாமல் தலைப்பின் அடிப்படைக் காரணத்தை புரிந்து கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும்.

வரிசைப்படி படிக்க வேண்டும்

    தேர்வுக்கு படிக்க தொடங்க போது பாடத்தின் கடைசி அத்தியாயம் அல்லது நடுவில் இருந்து தொடங்க கூடாது. பாடத்தின் முதல் அத்தியாயத்தில் இருந்து படிக்க தொடங்கினால் மட்டுமே பாடத்தின் அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

தேவையற்ற தலைப்புகளை தவிர்க்கவும்

    மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் போது தேவையற்ற தலைப்புகளை படிப்பதால் வீணாக நேரம் செலவாகும் இதனால் தேவையற்ற தலைப்புகளை தவிர்த்துவிட்டு முக்கியமான தலைப்புகளை மட்டும் படிக்கவும்.

நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள்

    மாணவர்கள் செய்யும் முக்கிய தவறு ஒரே தலைப்பை படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது. இவ்வாறு செய்தால் நேரம் வீணாகும், ஆகையால் தேர்வுக்கு படிப்பதற்கு முன் தலைப்புகளுக்கு ஏற்ப நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் அந்த தலைப்பை படித்து தயாராகுங்கள்.

கடைசி நேர திருப்புதல்

    தேர்வுகளுக்கு முந்தைய கடைசி சில நாட்கள் புதிதாக எதையும் படிக்காமல் ரிவிசன் செய்வதால் நீங்கள் படித்த தலைப்பு உங்களுக்குள் ஆழமாக பதியும். தேர்வில் தேர்ச்சிக்கான நம்பிக்கையும் ஏற்படும்.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கு பகிரவும். மேலும் இது போன்ற தகவலுக்கு ஹெர் ஜிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.