கையில் கண்ணாடி வளையல்களை அணியும் போது உடையாமல் இருக்க டிப்ஸ்


Alagar Raj AP
08-11-2024, 15:26 IST
www.herzindagi.com

    பெண்களின் அலங்காரம் வளையல்கள் இல்லாமல் முழுமையடைவதில்லை. அப்படி பெண்கள் பல வகைகளில் வளையல் அணிந்தாலும் கண்ணாடி வளையல்களை அணியும் போது உடைந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் இந்த தந்திரங்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உடையாமல் அணியலாம்.

மாய்ஸ்சரைசர்

    கண்ணாடி வளையலை அணிவதற்கு முன் கைகளில் மாய்ஸ்சரைசரை தேய்த்து அணிந்தால் வளையலை உடையாமல் அணியலாம்.

பாலிதீன் கவர்

    கைகளில் பாலிதீன் கவரை அணிந்து அதன் மேல் கண்ணாடி வளையலை அணிந்தால் உடையாமல் கைகளுக்குள் செல்லும்.

சோப்பு

    வளையல் அணிவதற்கு முன் கைகளில் சோப்பு தடவி அதன் பின் கண்ணாடி வளையலை அணிந்தால் உடையாமல் அணிய முடியும்.

கற்றாழை ஜெல்

    கற்றாழை ஜெல்லின் க்ரீஸ் தன்மை கண்ணாடி வளையலை எந்தவிதமான சேதமும் இன்றி கைகளில் அணிய உதவும்.

க்ரீஸ் தன்மையுள்ள பொருட்கள்

    தேங்காய் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி, பேபி ஆயில், பாடி கிரீம் போன்ற க்ரீஸ் தன்மை உள்ள பொருட்களை கண்ணாடி வளையல் போடுவதற்கு முன் கைகளில் பயன்படுத்தலாம்.

    உங்கள் கைகள் பெரிதாகிவிட்டது அதனால் கண்ணாடி வளையல் மட்டுமின்றி மற்ற வளையல்களையும் அணிய முடியவில்லை என்றாலும் கூட இந்த குறிப்புகளை பின்பற்றலாம்.