சுற்றுலா பயணிகள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வழிகள்
Alagar Raj AP
13-01-2024, 12:00 IST
www.herzindagi.com
சுற்றுலா சென்ற இடத்தில் நீங்கள் எடுத்து சென்ற பணம் தொலைந்து பணம் கிடைக்காமல் சிக்கித் தவிப்பது மோசமான திகில் கனவு போல் உங்கள் பயணம் மாறிவிடும். இது போல் நடப்பதை எவ்வாறு தடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
பிரித்து வழங்குதல்
நீங்கள் குழுவாக சுற்றுலா சென்றால் பணத்தை ஒருவரே வைத்திருக்காமல் உங்கள் குழுவிடம் பிரித்து வழங்கினால் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஒருவரிடம் பணம் தொலைந்தால் குழுவின் மற்ற நபர்களிடம் பணம் இருக்கும்.
பண பெல்ட்
பண பெல்ட் அல்லது பம் பேக் எனும் இடுப்பில் பொருத்தக்கூடிய பேக்குகள் சந்தையில் பல உள்ளன. உங்கள் இடுப்பிலேயே இந்த பெல்ட் இருப்பதால் அதனுடன் இருக்கும் பேக்கில் பணத்தை வைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் இந்த பெல்ட்டுகளை பயன்படுத்தினால் பேஷனாகவும் காட்டும்.
விடுதியில் வைப்பது
உங்களுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை விடுதியில் வைப்பது பாதுகாப்பானது. ஒருவேளை பணம் தொலைந்தால் விடுதியில் இருக்கும் பணம் உதவும்.
UPI
சுற்றுலா செல்லும் போது கையில் பணத்தை எடுத்துச் செல்வதை விட UPI போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
கேஷ் பாஸ்போர்ட்
வெளிநாடு சுற்றுலா செல்வோர் ஒரே நேரத்தில் 10 நாடு கரன்சிகள் வரை சேமிக்க கூடிய கேஷ் பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம் இல்லாத கார்டைப் பயன்படுத்தினால் நீங்கள் சுற்றுலா சென்ற நாட்டின் பணத்தை பரிமாற்ற வேண்டாம்.
சுற்றுலா காப்பீடு
சுற்றுலா செல்லும் முன் பயணக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். சுற்றுலா சென்ற நாட்டில் பணம், பொருட்கள் ஏதேனும் திருடப்பட்டால் காப்பீடு மூலம் உரிமை கோரலாம்.