மகா சிவராத்திரியில் சிவனுக்கு இந்த மலர்களை படைத்து வழிபாடு செய்யுங்கள்.. சிவனின் ஆசி கிடைக்கும்!


Alagar Raj AP
05-03-2024, 13:00 IST
www.herzindagi.com

    சிவபெருமானின் ஆசியைப் பெற மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு விருப்பமான இந்த மலர்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அது என்ன மலர்கள் என்று காண்போம்.

தும்பை பூ

    தும்பைப் பூவை வைத்து சிவபெருமானை வணங்கினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது.

செம்பருத்தி பூ

    சிவபெருமானுக்கு செம்பருத்தி பூவை படைத்தது வழிபட்டால் நீங்கள் சந்திக்கும் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது.

மல்லிகை பூ

    மல்லிகைப் பூவால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் பிரிந்த சொந்த பந்தம் மீண்டும் இணையும் மற்றும் புதிய வாகனம் வாங்க வாய்ப்பு அமையும்.

எருக்கம் பூ

    எருக்கம் பூவால் சிவனை வழிபாடு செய்தால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களில் இருந்து சிவன் உங்களை மன்னிப்பார் என நம்பப்படுகிறது.

ரோஜா பூ

    மகா சிவராத்திரி அன்று ரோஜா பூக்களை படைத்து சிவபெருமானை வணங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாம்பத்திய உறவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆளி மலர்

    ஆளி மலரால் சிவனை வணங்கினால் சிவனின் பார்வை உங்கள் மேல் விழும். அத்துடன் விஷ்ணுவின் ஆசியும் கிடைக்கும்.