பெண்களுக்கு தலைமுடி நீளம் குறைவாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் எவ்வித பிரச்சனையின்றி இருப்பது தான் அவர்களுக்கு அழகு. ஆனாலும் நுனி முடியில் ஏற்படக்கூடிய பிளவு அதன் அழகைக் கெடுத்து விடும். இவற்றை சரி செய்வதற்கான எளிய டிப்ஸ்கள்.
வாழைப்பழம் மற்றும் தேன்:
பழுத்த வாழைப்பழங்களை நன்றாக மசித்து அதனுடன் தேன் கலந்துக்கொள்ளவும். இந்த கலவையை தலைமுடியின் நுனியில் நன்கு அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் தலைமுடி வலுவாக இருக்கும்.
வாழைப்பழம், முட்டை, தேங்காய் எண்ணெய்:
வாழைப்பழம், முட்டை, தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கலந்து தலைமுடியில் அப்ளை செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நுனி முடி பிளவைத் தடுக்கிறது.
ஈரத்தைத் தவிர்க்கவும்:
தலைமுடியை எப்போதும் ஈரமாக வைத்திருக்கும் போது வலுவிழக்கக்கூடும். நுனியில் முடி இரண்டாக பிளவுப்படக்கூடும் என்பதால் ஈரமாக இருப்பதைத் தவிர்க்கவும்.
மேலும் எப்போதும் தலைக்கு நன்றாக எண்ணெய் தடவவும்,வாரத்திற்கு ஒருமுறையாவது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துக் குளிக்கவும்.