பொங்கல் பொங்கி வரும்போது பெண்கள் குலவை ஒலி எழுப்ப இது தான் காரணம்


Alagar Raj AP
08-01-2024, 15:00 IST
www.herzindagi.com

மங்கல ஒலி

    தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி தான் குலவை சத்தம். இது பெரும்பாலும் பெண்களால் எழுப்படுகிறது.

குலவை சத்தம் எழுப்பும் முறை

    ஒரு கையை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம்

தொடக்க ஒலி

    நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளை தொடங்கும் போது குலவை சத்தம் எழுப்பப்படுகிறது. வயதுக்கு வந்த பெண்களுக்காக நடத்தப்படும் பூப்புனித நீராட்டு விழாவில் அவர்களின் வாழ்க்கையை தொடங்க குலவை சத்தம் எழுப்பப்படுகிறது. வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.

தை வரவேற்பு ஒலி

    குளிர்காலம் முடிந்து விவசாயிகளுக்கு உகர்ந்த காலமான வசந்த காலம் அல்லது அறுவடை காலம் தொடங்கும். அதனை வரவேற்கும் விதமாக பொங்கல் பொங்கி வரும் போது குலவை ஒலி எழுப்புவது தமிழர்களின் வழக்கம்.

பலதரப்பட்ட மக்களின் ஒலி

    தெற்காசிய நாடுகள், எகிப்து, ஐரோப்பிய பழங்குடியினர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இன மக்களின் நிகழ்ச்சிகளில் குலவை சத்தம் இடம் பெறுவதை நம்மால் காண முடியும்.

சங்க இலக்கியங்கள்

    அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, உள்ளிட்ட பல சங்க இலக்கிய நூல்களில் குலவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கு பகிரவும். மேலும் இது போன்ற சுவாரசிய தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.