பல உடல் மற்றும் மன நலன்களை அள்ளி வழங்கும் துளசி மாலை
Alagar Raj AP
05-04-2024, 14:33 IST
www.herzindagi.com
இறைவன் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த செடியாக துளசி செடி உள்ளது. இதன் வேரில் உள்ள சிறிய மரப்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் 108 மணிகள் கொண்ட துளசி மாலையை வைணவர்கள் அணிவதை காணலாம். இதை அணிவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
விஷ்ணுவின் பாதுகாப்பு
துளசி மாலையை தொடர்ந்து அணிந்தவர்களை விஷ்ணு தனது பாதுகாப்பில் வைத்திருப்பதாக ஐதீகம் உள்ளது.
வைகுண்டத்தில் இடம்
துளசி மாலையை வாழ்நாள் முழுவதும் அணிந்து அத்துடன் ஒருவரின் உயிர் பிரிந்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மன அழுத்தம் குறையும்
துளசி மாலையை கழுத்தில் அணிவதால் அக்குபிரஷர் புள்ளிகள் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
துளசி ஆண்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணியாக செயல்படுகிறது. எனவே இதில் தயாரிக்கப்படும் மாலையை அணிந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
துளசி மாலை உடலில் மின் அலைகளை உருவாக்கி இரத்த ஓட்டம் தடைபடாமல் சீராக இயங்கி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
புகழும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்
துளசி மாலையை அணிந்து தினமும் விஷ்ணுவை வணங்கினால் புகழும், அதிர்ஷ்டமும் பெருகும் என்பது ஐதீகம்.