உங்கள் அழகை உயர்த்த சரியான நெக்லஸைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அதற்கு மேல் நெக்லஸ்களை சரியான நெக்லைன்களுடன் இணைப்பது என்பது ஒரு கலையாகும். எனவே இந்த பதிவில் நெக்லைனுக்கு ஏற்ப அணிய வேண்டிய நெக்லஸ்கள் குறித்து காண்போம்.
வி-நெக்லைன்
வி-நெக்லைன் உள்ள ஆடைகளுக்கு குறுகலான மற்றும் நீளமான நெக்லஸ்களை தேர்வு செய்யலாம். அதில் சொக்கர் நெக்லஸ், லேயர்டு நெக்லஸ், ஒய் வடிவ நெக்லஸ் பொருந்தும்.
ரவுண்டு நெக்லைன்
நீங்கள் வட்டமான நெக்லைன் உள்ள ஆடைகளை அணிந்திருந்தால் உங்கள் நெக்லஸும் வட்டமாக இருக்க வேண்டும். அதற்கு சொக்கர் நெக்லஸ் கச்சிதமாக பொருந்தும்.
ஸ்வீட்ஹார்ட் நெக்லைன்
ஸ்வீட்ஹார்ட் நெக்லைன் ஆடை என்றால் நீங்கள் பென்டென்ட் நெக்லஸை தேர்வு செய்யலாம்.
ஆஃப் ஷோல்டர் நெக்லைன்
ஆஃப் ஷோல்டர் நெக்லைன் கொண்ட ஆடைகளுக்கு தோள்பட்டை எலும்புக்கு மேல் தொங்கும் லேஸ் சொக்கரைத் தேர்ந்தெடுக்கவும்.
போட் நெக்லைன்
நீங்கள் போட் வடிவ நெக்லைன் ஆடையை அணிந்திருந்தால் நடுத்தர நீளம் உள்ள மேட்டினி நெக்லஸ் அழகாக இருக்கும்.
காலர் நெக்லைன்
நீண்ட மற்றும் லேயர்டு நெக்லஸுகளை காலர் நெக்லைன் உள்ள ஆடைகளுக்கு அணிவது சரியான தேர்வாக இருக்கும்.