One side Love: ஒருதலை காதலில் இருந்து வெளிவருவதற்கான வழிகள்
Alagar Raj AP
15-01-2024, 15:00 IST
www.herzindagi.com
ஒரு தலை காதல் நிராகரிப்பு
நீங்கள் ஒருதலையாக காதலிக்கும் நபர் உங்களை நிராகரித்தால் அவர்களின் முடிவுக்கு மதிப்பளித்து வெளியே வருவது நல்லது. ஆனால் அது உங்கள் உணர்வுகளை பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து எப்படி வெளிவருவது என்பது குறித்து காண்போம்.
உடற்பயிற்சி
ஒருதலை காதல் வலியில் இருந்து விடுபட உடற்பயிற்சி செய்யலாம். உடல் வலி மன வலியை மறக்க செய்யும்.
இலக்கு
படிப்பு, வேலை போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இலக்கை அடைந்தால் காதலின் வலிகள் பெரிதாக இருக்காது.
நண்பர்கள்
நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போது நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக இருக்கும். இதனால் உங்களால் எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளிவர முடியும்.
நினைவுகளை டெலீட் செய்யுங்கள்
அவருடன் பேசிய பழைய சேட்கள், அவரின் புகைப்படங்களை டெலீட் செய்வது அவர்களின் நினைவுகளில் இருந்து மீள முடியும்.
பயணம்
புதிய இடங்களுக்கு பயணம் செய்வதால் புதிய அனுபவம் கிடைக்கும். இயற்கையுடன் நேரத்தை செலவிடும் போது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
புதிய காதல்
முந்தைய காதலில் தோற்றால் மீண்டும் காதலிக்க கூடாது என எந்த சட்டமும் இல்லை. அதனால் முந்தைய காதலில் கிடைத்த அனுவபவத்தை வைத்து புதிய காதலை தேடுங்கள்.