வீட்டு டைல்ஸ் தரையை சுத்தம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய இரசாயனங்கள்
Alagar Raj AP
23-02-2024, 18:00 IST
www.herzindagi.com
வீட்டு டைல்ஸ் தரையை சுத்தம் செய்ய பலரும் பல இரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் தவறான இரசாயனங்களை பயன்படுத்தி சுத்தம் செய்தால் அது உங்கள் வீட்டு டைல்ஸ் தரையை நாசமாகிவிடும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
வினிகர்
ஆடைகளில் கடினமான கறைகளை சுத்தம் செய்ய பெரும்பாலும் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. வினிகர் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. ஆனால் இதை பயன்படுத்தி வீட்டு டைல்ஸ் தரையை சுத்தம் செய்தால் டைல்ஸ் சேதமடையும்.
அம்மோனியா
அம்மோனியா அடிப்படையிலான கிளீனர்களைப் பயன்படுத்தி டைல்ஸை சுத்தம் செய்தால் அது டைல்ஸின் நிற மாறுதலுக்கு வழிவகுக்கும். இதனால் பளபளப்பை இழந்து டைல்ஸ் நிறம் மந்தமாக இருக்கும். அம்மோனியா பூனையை அதிகம் சிறுநீர் கழிக்க தூண்டும் என்பதால் வீட்டில் பூனை வளர்ப்பவர்கள் அம்மோனியா பயன்படுத்த கூடாது.
ப்ளீச்
ப்ளீச் பயன்படுத்தி சுத்தம் செய்தால் டைல்ஸ் தரை பளபளப்பாகும் என கூறினாலும். தொடர்ச்சியாக அதிக ப்ளீச் பயன்படுத்தி சுத்தம் செய்தால் டைல்ஸ் சேதமடையும். சில சமயங்களில் டைல்ஸ் பெயர்ந்து வர கூட வாய்ப்புள்ளது.
எண்ணெய் அல்லது மெழுகு
எண்ணெய் மற்றும் மெழுகு அடிப்படையிலான கிளீனர்களை பயன்படுத்தி வீட்டு டைல்ஸை சுத்தம் செய்வதால் எண்ணெய் மற்றும் மெழுகுகின் பிசுபிசுப்பு தன்மை காரணமாக மேலும் கழுகுகளை அது ஈர்க்கும்.
சிராய்ப்பு துடைப்பான்கள்
சிராய்ப்பு துடைப்பான்களை வைத்து சுத்தம் டைல்ஸை செய்வதால் டைல்ஸில் படிந்துள்ள கறைகள் நீங்கும், ஆனால் இது கீறல்களை ஏற்படுத்தி டைல்ஸை சேதமடைய செய்யும்.
படித்ததற்கு நன்றி
இந்த கதை பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.