பெண்கள் அணியும் விதவிதமான ஆபரணங்களின் பலன்கள்


Alagar Raj AP
11-07-2024, 13:46 IST
www.herzindagi.com

    பெண்கள் விதவிதமான ஆபரணங்கள் அணிவதற்கு பின்னால் முக்கிய அறிவியல் பயன் இருக்கிறது. ஆபரணங்களை அணியும் போது வர்ம புள்ளிகளில் ஏற்படும் அழுத்தம் உடல் உறுப்புகளுக்கு நன்மை அளிக்கிறது.

தோடு

    தோடு எனப்படும் காதணியை பொதுவாக ஆண், பெண் இருபாலரும் அணிவார்கள். தோடு அணிவதால் கண் பார்வை அதிகரிக்கும் மற்றும் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

மோதிரம்

    பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் இருப்பதால் மோதிரம் அணிவதால் இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வளையல்

    வளையல் அணிவதால் முன் கை பகுதியில் உள்ள புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதனால் உடலில் வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.

தாலி செயின்

    தாலி செயின், நெக்லஸ் போன்ற கழுத்தில் அணியும் ஆபரணங்கள் உடலுக்கும், தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டத்தை சீராக்கும். இதனால் நேர்மறை சக்தி அதிகரிக்கும்.

மெட்டி

    கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் கருப்பையின் நரம்பு முடிவடைகிறது. இங்கு அழுத்தம் ஏற்படுவதால் கர்ப்பப்பை பலப்படும், பாலுணர்வு ஹார்மோன்கள் தூண்டப்படும். அதனால் தான் இந்த விரலில் மெட்டி அணியப்படுகிறது.

மூக்குத்தி

    மூக்கில் மூக்குத்தி அணியப்படும் இடத்தில் உள்ள புள்ளியில் பெருங்குடல் மற்றும் சிறு குடலுக்கு தொடர்பு இருக்கிறது. அந்த புள்ளிகள் தூண்டப்படுவதால் குடல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.