உடல் எடை குறைப்பு முதல் மலச்சிக்கல் வரை இசப்கோல் ஆரோக்கிய நன்மைகள்


S MuthuKrishnan
19-10-2024, 11:31 IST
www.herzindagi.com

இசப்கோல் என்றால் என்ன?

    சைலியம் உமி என்றும் அழைக்கப்படும் இசப்கோல் பிளாண்டகோ ஓவாடா என்ற தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படுகிறது. இசப்கோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இசப்கோல் தண்ணீரை உறிஞ்சி தக்க வைக்கும் திறன் கொண்டது.

Image Credit : freepik

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு

    இது உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த அமிலங்களை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலில் அதிகமாக சேரும் கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.

Image Credit : freepik

மூல நோயாளிகள்

    இசப்கோல் மூல நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். இது மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது, மூல நோயாளிகளுக்கு ரத்தப்போக்கை குறைக்கிறது.

Image Credit : freepik

சர்க்கரை நோய்

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதை எடுத்துக் கொள்வதன் மூலம் இன்சுலின் புனர் திறனை அதிகரிக்கிறது மற்றும் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.

Image Credit : freepik

பசி கட்டுப்பாடு

    நீரில் கரையக்கூடிய இதன் தன்மை நாம் இதனை நீரில் கலந்து எடுத்துக் கொள்ளும் போது நீண்ட நேரம் பசி உணர்வை தூண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

Image Credit : freepik

செரிமானத்தை மேம்படுத்துகிறது

    உங்கள் வயிற்றில் உள்ள அனைத்து தேவையற்ற நச்சுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது. மேலும் பெருங்குடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

Image Credit : freepik

வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு

    இசப்கோலின் நீர் உறிஞ்சும் தன்மை வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

Image Credit : freepik

முடி வளர்ச்சி

    இசப்கோல் முடி வளர்ச்சியை தூண்டும் தன்மை கொண்டது முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

Image Credit : freepik

முகப்பொலிவு

    இது முகத்தில் வறட்சித் தன்மையை குறைக்கும் பண்பு கொண்டது மேலும் இயற்கையாக பளபளப்பான சருமத்தை தரும் முகத்தின் மென்மையையும் அழகையும் மெருகூட்டம்.

Image Credit : freepik