காளான் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?


Shobana Vigneshwar
20-05-2023, 08:30 IST
www.herzindagi.com

காளான்

    உயர் புரதம் நிறைந்த காளானில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய புரதம், குளூட்டன், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. காளானின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…

Image Credit : freepik

வயிற்றுக்கு நல்லது

    காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றுக்கு நல்லது. இது நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவும். இதனுடன் மலச்சிக்கல், உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.

Image Credit : freepik

எலும்புகளை வலுப்படுத்தும்

    காளானில் அதிக அளவில் உள்ள வைட்டமின் D, K, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

Image Credit : freepik

எடை இழப்புக்கு உதவும்

    காளானில் குறைந்த அளவு மட்டுமே கலோரி உள்ளது. இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காளான் சாப்பிடலாம்.

Image Credit : freepik

இதயத்திற்கு நல்லது

    நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ள காளான் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

Image Credit : freepik

புற்றுநோயை தடுக்கும்

    காளானில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களிடம் இருந்து உடலை பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

Image Credit : freepik

நினைவாற்றலை மேம்படுத்தும்

    காளானில் உள்ள கூறுகள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik